முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கொண்டு வந்த வேளாண்மன்ற சட்டம் செயல்பாட்டில் இல்லை-ஜெயலலிதா அறிவிப்பு

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.- 17 - தி.மு.க. கொண்டு வந்த வேளாண் சட்டம் தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும் முற்றிலும் நீக்க சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். வேளாண்துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் பேசும்போது,  கடந்த தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளின் உரிமைகளை பறிக்கும் விதமாக வேளாண் மன்ற சட்டம் என்ற கருப்பு சட்டத்தினை கொண்டுவந்தார்கள். அதில் பிரிவு 14 (1) என்ற விதியின்படி பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆலோசனை குழுவில் இடம் பெற முடியும் .அந்த வகையில் வேளாண்மை அமைச்சரே அந்த குழுவில் இடம் பெற முடியாது. அப்படிபட்ட மோசமான சட்டத்தை நிறைவேற்ற கூடாது என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா தி.மு.க. ஆட்சியில் வேளாண்மன்ற  என்ற விவசாயிகள் உரிமையை பறிக்கு சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி சட்டம் முன் முடிவு கொண்டுவரப்பட்டு பிரிவு 19/2009-ல் நிறைவேற்றப்பட்டது. அதில் பிரிவு 1 உட்பிரிவு 3-ன் படி கூறிய படி என்றைக்கு அரசு அறிவிக்கை வெளியிடுகிறதே அன்று தான் நடைமுறைக்கு வரும் என்றைக்குமே அரசால் அறிக்கை வெளியிடப் படாது. ஆகவே சட்டம் தற்போது செயல்பாட்டில் இல்லை. இனி அறிக்கையில் அரசால் வெளியிடப்படாது. மேலும் இனியும் முற்றிலுமாக இந்த சட்டத்தை நீக்குவது சம்மந்தமாக சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெற்று முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்