முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு 40 தொகுதிகளே கொடுக்க முடியும்-மம்தா

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,மார்ச்.- 5 - மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு 40 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனால் இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த 34 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் செல்வாக்கில் பலத்த சரிவு ஏற்பட்டுள்ளது. இதை தெளிவுபடுத்தும் வகையில் மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 296 சட்டசபை தொகுதிகளில் 200 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட உள்ளது. 

ஆனால் காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது. 40 தொகுதிகளை மட்டுமே காங்கிரசுக்கு விட்டுத் தர முடியும் என்று மம்தா கூறியுள்ளார். ஆனால் காங்கிரசார் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மம்தாவை விட்டு பிரிவதில்லை என்ற முடிவுடன் காங்கிரஸ் இருப்பதால் முடிந்த அளவு தொகுதிகளை பெற காங்கிரஸ் காய்களை நகர்த்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்