முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணமடைந்த உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.19 -  திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பணியிலிருந்தபோது மாரடைப்பால் மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கே.பெரியசாமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிப்புரிந்து வந்த க.பெரியசாமி என்பவர் 13.8.11 அன்று பெளர்ணமி கிரிவல பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க துயருற்றேன்.

கே.பெரியசாமியின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடமையாற்றிக் கொண்டிருந்தபோது காலமான சிறப்பு உதவி ஆய்வாளர் கே.பெரியசாமியின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த கே.பெரியசாமி மறைவின் காரணமாக அன்னாரின் மனைவி கஸ்தூரிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய இரங்கல் செய்தி வருமாறு:-

தங்கள் கணவர், சிறப்பு உதவி ஆய்வாளர் கே.பெரியசாமி 13.8.11 அன்று பெளர்ணமி கிரிவல பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனைக்க கொண்டு செல்லும் வழியில் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்துள்ளேன்.

இந்த துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு  ஏற்பட்டுள்ள போதிலும், இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கே.பெரியசாமியின் மறைவினால் வாடுகின்ற தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony