முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகுதி நேர துப்பரவு ஊழியர்கள் விரைவில் பணி நிரந்தரம்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.19 - பகுதி நேர பணியாளர்களாக பணி புரிந்து வரும் 5,516 துப்பரவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். 600 உதவிப் பொறியாளர்கள், பணியமர்த்தப்படுவார் என மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று மின்சாரத்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

பெருகி வரும் மின் நுகர்வோர்களின் எண்ணிக்கையினாலும் அவர்களின் மின் தேவையை ஈடுகட்டும் பொருட்டும், 55 துணை மின் நிலையங்களும் அவற்றுடன் கூடிய 2500 கி.மீ. மிக உயர் அழுத்த மின் பாதைகளும் சுமார் ரூ.1365 கோடி செலவில் அமைக்கப்படும்.

தமிழகத்தில் ஒட்டு மொத்த தொழில் நுட்பம் மற்றும் வணிக இழப்புகளைக் (அப  ேஇ) குறைக்கவும் மின் தரப்பு மேலாண்மையை மேம்படுத்தவும் ஊரக மின்னூட்டிகள் பிரிக்கப்படும். இத்திட்டம் முதல் கட்டமாக விழுப்புரம் மண்டலத்தில் சுமார் 100 மின்னூட்டிகளில் ரூ.300 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், தரமான மின்சாரம் விநியோகிக்கவும் விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மின் பகிர்மான வட்டம் ஏற்படுத்தப்படும்.

தர்மபுரி மின்பகிர்மான வட்டத்தினைப் பிரித்து கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டொன்றுக்கு ரூ.20 லட்சம் செலவில் புதிதாக ஒரு மின் பகிர்மான வட்டம் ஏற்படுத்தப்படும்.

இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்போது 6 வங்கிகளில் (ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸியா வங்கி) உள்ளது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் தற்போது வாரியத்தின் மின் கட்டண வசூலுடன் தொடர்புடைய இதர வங்கிகளிலும் இந்த சேவை அறிகமுகப்படுத்தப்பட்டு மின் நுகர்வோர் சேவைகள் மேம்படுத்தப்படும்.

2012-ம் ஆண்டில் மின் உற்பத்தி துவங்கப்படவுள்ள வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-2, அலகு 1 மற்றும் அலகு 2, மேட்டூர் அனல் மின் நிலையம் நிலை -3, அலகு-1, பவானி கட்டளை தடுப்பணை புனல் மின் நிலையங்களை இயக்கவும் பராமரிக்கவும் 600 உதவிப் பொறியாளர்கள் பணியமர்த்தப்படுவர்.

5516 பகுதி நேரத் துப்புரவுப் பணியாளர்களின் பணி (நசூடீடீஙீடீஙுஙூ  ேநஹடூடுசிஹஙுநீ சூச்ஙுகூடீஙுஙூ) கால நிலை ஊதியத்துடன் நிரந்தரப்படுத்த ஆணைகள் வெளியிடப்படும். இதற்கான செலவு ஆண்டிற்கு ரூ.6.8 கோடி ஆகும்.

வீணாகும் வெப்ப சக்தியை மீட்கவல்ல எரிசக்தி சேமிப்புத் திட்டங்களை நிறைவேற்ற எரிசக்தித் திறனூக்கச் செயலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2 கோடி மின் ஆய்வுத் துறைக்கு ஒதுக்கப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப் பயன்படுத்தப்படும்.

டிசம்பர் 14-ம் நாள் எரிசக்தி சேமிப்பு தினமாக அனுசரிக்கும் வகையில், எரிசக்தி சேமிப்பு குறித்த செய்திகளை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் ரூ.5.25 லட்சம் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்