முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக குத்துச் சண்டை - இந்திய அணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 19 - அடுத்த மாதம் அஜர்பைஜானில் நடக்க இருக்கும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்காக 10 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் நேற்று அறிவித்தது. இது பற்றிய விபரம் வருமாறு - 

உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் அடுத்த மாதம் அஜ ர்பைஜான் நாட்டில் நடக்க இருக்கிறது. இதில் சாம்பியன்ஷிப் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களம் இறங்க ஆயத்தமாக உள்ளனர். 

10 பேர் கொண்ட இந்திய அணியில் முன்னணி வீரர்களான விஜேந்தர் சிங் மற்றும் அகில் குமார் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இந்தப் பட்டியலில் தேவேந்திர சிங்கும் இடம் பெற்று உள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. 

முன்னதாக நடைபெற்ற தேர்வுப் போட்டியின் போது, 20 வயதேயான தேவேந்திர சிங், 49 கிலோ லைட் பிளை எடைப் பிரிவில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமந்தீப் சிங் மற்றும் தாக்கோம் நானோ சிங் ஆகியோரை வீழ்த்தியதைத் தொடர்ந்து இந் தப் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். 

கடந்த முறை நடந்த உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியி ல் விஜேந்தர் சிங் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த முறை அவர் தங்கம் வெல்ல முயற்சிக்கிறார். 

இந்திய அணி குறித்து தேசிய பயிற்சியாளரான குர்பக்ஸ் சிங்கிடம் கே ட்ட போது, இதில் தேர்வு செய்யப்பட்டு உள்ள இந்திய அணி பலம் வாய்ந்தது என்றும், இதன் மூலம் ஒலிம்பிக்கில் இடம் பிடிப்பது மட்டு ம் முக்கியமல்ல என்றும், இதில் பதக்கம் வெல்வது அவசியம் என்றும் கூறினார். 

மேலும், இந்திய அணி இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட அணியாகும். எனவே இந்தப் போட்டியில் சிறப்பான பங்க ளிப்பை அளிக்கும். தேர்வு முகாமில் தேவேந்திர சிங் அபாரமமாக சண்டை இட்டார். எனவே அவர் அஜர்பைஜான் போட்டியிலும் சிறப் பாக சண்டை இட்டு பதக்கம் வெல்வார் என்றும் சிங் நம்பிக்கை தெரி வித்தார். 

அஜர்பைஜான் போட்டிக்கு தேர்வாகியுள்ள 20 வயதான தேவேந்திர சிங் மணிப்பூரைச் சேர்ந்தவர். தவிர, குத்துச் சண்டைப் போட்டியில் இளைஞர்களுக்கான தேசிய சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டிக்கு தேர்வானது குறித்து அவரிடம் கேட்ட போது, உலக குத்துச் சண்டைப் போட்டிக்கு நான் தேர்வானது எனக்கு ஆச்சரி யமளிக்கிறது. தேர்வு போட்டியில் நான் சிறப்பாக சண்டை இட்டே ன். இதை நான் எதிர்பார்க்கவில்லை. உலக குத்துச் சண்டைப் போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். தவிர, நான் பங்கேற்க இருக்கும் மிகப் பெரிய போட்டியாகும். இதில் கலந்து கொள்ள நான் ஆர்வமா க இருக்கிறேன் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago