முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 23-ல் மீனாட்சி கோயில் உற்சவ விழா

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.19 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல உற்சவம் வரும் 23 ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான ஜெயராமன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல உற்சவம் வரும் 23 ம் தேதி தொடங்கி 10.9.11 வரை நடக்கிறது. உற்சவ நாட்களில் கோயில் சார்பிலோ, உபயதாரர்கள் சார்பிலோ திருக்கல்யாணம், தங்கரத உலா, தங்க கவசம் சாத்துதல், வைரக் கிரீடம் சாத்துதல் ஆகியவை நடத்தப்பட மாட்டாது. மேலும் 7.9.11 அன்று புட்டு திருவிழா நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி பொன்னகரம் அருகே உள்ள புட்டுத் தோப்புக்கு செல்கிறார். அங்கு புட்டு திருவிழா நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!