முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும்-மன்மோகன்சிங் உறுதி

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு,மார்ச்.- 5 - பாகிஸ்தானுடன் திறந்த மனதுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே இந்தியா விரும்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  ஜம்முவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் அது குறித்து மேலும் கூறியதாவது, பாகிஸ்தான் தனது நாட்டில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக ஒரு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சதிகாரர்களையும் குற்றவாளிகளையும் நீதியின் முன்னே பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். 

இந்தியா, பாகிஸ்தான் உறவு சீரடைய வேண்டும். அப்போதுதான் இந்திய துணை கண்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும். எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தையை தொடர முடிவு செய்துள்ளோம். திறந்த மனதுடன் நாங்கள் பேச்சுவார்த்தைக்குள் நுழைவோம். இரு நாடுகள் இடையேயான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அத்தனை பிரச்சினைகளும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் அந்த நிகழ்ச்சியில் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்