முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்தியானந்தா - ரஞ்சிதாவிடம் போலீசார் விசாரணை

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.19 - நித்தியானந்தா- ரஞ்சிதா இருவரும் அளித்த புகாரின் பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கடந்த 2009-ம் ஆண்டு சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் படுக்கையறையில் இருந்ததாக காட்சி திரும்ப திரும்ப சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த புகைப்பட காட்சிகளை தினகரன் நாளிதழும், நக்கீரன் வார இதழும் வெளியிட்டன. மேலும் காட்சிகளை ஒளிபரப்பாமல் இருக்க ரூ.100 கோடி வரை பணம் கேட்டு மிரட்டியதாக நித்தியானந்தா பரபரப்பு புகார் ஒன்றை சன் டி.வி. நிர்வாகம் மற்றும் நக்கீரன் நிர்வாகத்தின் மீது தெரிவித்திருந்தார். 

இதற்கிடையில் நடிகை ரஞ்சிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் சன் டி.வி. நிர்வாகம், நக்கீரன், தினகரன் இதழ்கள் மீது புகார் ஒன்றை அளித்தார்.அதில் தன்னை தவறாக நித்தியானந்தாவுடன் இருப்பது போல் சித்தரித்து ஒளிபரப்பியதாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருந்தார். இதே போன்றதொரு புகாரை  நித்தியானந்தாவின் மேலாளர் சர்மானந்தா கமிஷனரிடம்  அளித்து நடவடிக்கை எடுக்கும்படிகோரியிருந்தார். இந்த 2 புகார்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றி கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். 

இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கடந்த வெள்ளிக் கிழமை ரஞ்சிதா கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணையில் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதேபோல் நேற்று மதியம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நித்தியானந்தா மாலை 6 மணி வரை  விசாரணை  அதிகாரியிடம் விசாரணையில் கலந்து கொண்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!