முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகமதுபட்டேல், சீத்தாராம் எச்சூரி ராஜ்யசபை எம்.பி.க்களாக பதவியேற்பு

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 20 - காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல், இடது கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீத்தாரம் எச்சூரி உள்பட 8 பேர் நேற்று ராஜ்யசபை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.  சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகர் அகமதுபட்டேல் குஜராத் மாநிலத்தில் இருந்து சமீபத்தில்  ராஜ்யசபை உறுப்பினராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல மேற்குவங்காள மாநிலத்தில் இருந்து சீத்தாராம் எச்சூரி ராஜ்ய சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகமதுபட்டேல் இந்தியிலும், சீத்தாராம் எச்சூரி ஆங்கிலத்திலும் பதவியேற்றுக்கொண்டனர். தொலைக்காட்சி நடிகை ஸ்மிதி இராணி, திலீப்பாண்டே (இருவரும் பா.ஜ.க.)ஆகியோர் குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் குஜராத்தி மொழியில் பதவியேற்றுக்கொண்டனர். மேற்குவங்காள மாநிலத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேபவ்ரத்தா பந்தோபாத்தியாயா, பிரபல வினாடி வினா நிகழ்ச்சி தொகுப்பாளர் டெரெக் ஓ கிரீன், சுதீந்து சேகர்ராய் மற்றும் ஸ்ரீஜாய் போஸ் ஆகியோரும் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்ய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதீப் பட்டாச்சார்யாவும் ராஜ்ய சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு ராஜ்யசபை  சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. சபைத் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களை வரவேற்று பேசினார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியன்போது ராஜ்யசபையில் பிரதமர் மன்மோகன்சிங்கும் இருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago