முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜூன் சிங் மரணம்

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.-5 - காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அர்ஜூன் சிங் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 81. மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன்சிங் அந்த மாநில காங்கிரஸ் முதல்வராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்பராவ் ஆகியோர் தலைமையில் மத்தியில் காங்கிரஸ அமைச்சராக இருந்தபோது அமைச்சராக இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி மறைவிற்கு பிறகு பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை. 

81 வயதான அர்ஜூன்சிங் சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அதனால் அவர் தீவிர அரசியிலில் இருந்து ஒதுங்கி இருந்தார். உடல்நலக்கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பிற்பகலில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு தலைவர்களும் பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்