முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சுடும் வீரர் ககன்நரங்கிற்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 20 - இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடும் வீரர் ககன்நரங்கிற்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதும், கிரிக்கெட் வீரர் ஜாஹீர்கானுக்கு அர்ஜுனா விருதும் வழங்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு 2011 ம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா குடியரசுத்தலைவர் மாளிகையில் வருகிற 29 ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் வீரர்களுக்கு விருதுகளை வழங்கவுள்ளார். இதில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்த ககன்நரங்கிற்கு வழங்கப்பட இருக்கிறது. அர்ஜுனா விருதுக்கு இம்முறை 19 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர்கானும் ஒருவர். அர்ஜுனா விருதுபெறும் மற்றவர்கள் பெயர் வருமாறு:
சோம்தேவ் தேவ்வர்மன் (டென்னிஸ்), பிரீஜா ஸ்ரீதரன் (தடகளம்), ஜுவாலா கட்டா(பேட்மிண்டன்), ராஜ்பால்சிங்(ஹாக்கி), ராகுல்பானர்ஜி(வில்வித்தை), சுரன்ஜாய்சிங் (குத்துச்சண்டை), சுனில் சேட்ரி(கால்பந்து), ராகேஷ்குமார்(கபடி), தேஜஸ்வினி சவந்த்(துப்பாக்கி சுடுதல்),விர்தவால் காடே(நீச்சல்), ஆஷிஷ்குமார்(ஜிம்னாஸ்டிக்), ரவீந்தர்சிங்(மல்யுத்தம்), ரவிகுமார்(பளுதூக்குதல்), விகாஸ் கெளடா(தடகளம்), பிரசண்டா கர்மாகர்(நீச்சல்), சந்தியா ராணி(ஊஷு), சஞ்சய்குமார்(வாலிபால்), தேஜஸ்வினி (கபடி)
சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியார் விருதுக்கு ராஜீந்தர்சிங்(ஹாக்கி), வெங்கடேஷ்வரராவ்(குத்துச்சண்டை), தேவேந்திரகுமார் ரத்தோர்(ஜிம்னாஸ்டிக்), ராம்பால்(மல்யுத்தம்), குன்டல்ராய்(தடகளம்) ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதான தயான்சந்த் விருது சபீர்அலி (கால்பந்து), சுஷில்கோலி(நீச்சல்), ராஜ்குமார்(மல்யுத்தம்)ஆகியோருக்கும் வழங்கப்பட இருக்கிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்