முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் அக்டோபர் முதல் புதிய வாக்காளர் சேர்க்கை தேர்தல் அதிகாரி தகவல்

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

கோவை,ஆக.- 20 - தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர்கள் சேர்க்கை அக்டோபர் முதல் துவங்கும் என தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.  கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். கோவை கலெக்டர் கருணாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம், துணை கமிஷனர் சிவராஜ், கோவை கோட்டாட்சியர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அம்மாசி, கலெக்டர் நேர்முக உதவியாளர் அழகேசன், தேர்தல் வட்டாட்சியர் முரளி கிருஷ்ணன் மற்றும் துணை தாசில்தார்கள், தேர்தல் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகிய பணிகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு நடத்தினார். இதையடுத்து அவர் கூறியதாவது,
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களின் எண்ணிக்கை 4.61 கோடியாக இருந்தது. பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்யப்பட்ட பின்னர் 4.20 கோடியாக குறைந்தது. சட்டசபை தேர்தலையொட்டி 26.3.11 தேதி வரை நடந்த வாக்காளர் சேர்க்கைக்கு பின்பு 4.71 கோடியாக உயர்ந்தது. தமிழகத்தில் ஆண்டுக்கு 2 சதவீதம் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதில் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை வாக்காளர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. வரும் அக்டோபர் முதல் தேதி முதல் 18 வயது பூர்த்தியானவர்கள் அடிப்படையாக கொண்டு துவங்கவுள்ளது. புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு வரும் 26 ம் தேதி திருப்பூர், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, சென்னை, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தேதியை தமிழக தேர்தல் கமிஷனர் அறிவிப்பார். உள்ளாட்சி தேர்தலில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 45 ஆயிரம் ஓட்டு பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. கிராமப்புற பகுதிகளில் ஓட்டுப் பெட்டி பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்