முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களை சேர்க்க அனுமதி நீதிபதி அப்துல் ஹாதி தலைமையில் குழு தமிழகஅரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 20 - சுயநிதி மருத்துவம் - செவிலியர் பட்டப்படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்களை சேர்க்கைக்கு  நீதிபதி அப்துல் ஹாதி தலைமையில் குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்குழு நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்தும் இக்குழுவின் அனுமதியின்றி நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திலுள்ள சுயநிதி மருத்துவம் மற்றும் மருத்துவமம் சார்ந்த தொழிற்கல்வி கல்லூரிகளில் (சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத) நேர்மையான, ஒளிவு மறைவற்ற வெளிப்பபடையான மற்றும் சுயநலமற்ற வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உறுதிப்படுத்துவதற்கு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் அ.அப்துல் ஹாதி தலைமையின் கீழ் சுயநிதி தொழிற் கல்லூரிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்புக்குழு வினை தமிழக அரசு அமைத்துள்ளது. 

இக்குழுவில் உறுப்பினர் செயலராக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செலயாளர் கிரிஜா வைத்யநாதன் மற்றும் உறுப்பினர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன், டாக்டர் கே.ஆனந்தகண்ணன், டாக்டர் எஸ்.கே.ராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

2011-2012-ம் கல்வியாண்டிற்கு மருத்துவம் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முடிவு செய்வதற்கு மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், மருந்தாளுநர், பி.ஓ.ட்டி, பி.பி.ட்டி, இந்திய மருத்துவம் ஆகிய பிரிவுகளிலுள்ள பட்டம் மற்றும்  பட்ட மேற்படிப்புகளை நடத்தும் கல்லூரிகள், பயிலகங்கள், கூட்டமைப்புகள் மற்றும் சங்கங்கள் ஆகியவற்றை 5.7.11 அன்று நடைபெறும் குழு கூட்டத்திற்கு நேரில் கலந்து கொள்ளுமாறு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் 26.6.11 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

5.7.11 மற்றும் 5.8.11 அன்று நடைபெற்ற குழு கூட்டத்தில், ஒன்பது கல்லூரிகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு தனியார் தொழிற்கல்லூரிகளின் சங்கம் - சுகாதாரம்  அறிவியல் சார்பில் செயலாளர் மற்றும் தமிழ்நாடு அங்கீகரிகப்பட்ட செவிலியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதுத்தொடர்பாக 5.7.11, 5.8.11 மற்றும் 17.8.11 நாட்களில் குழுக்கூட்டம் நடைபெற்றது.

மேற்படி குழு கூட்டங்களில் குழு உறுப்பினர்கள் அலோசித்து, தமிழ்நாடு தனியார் தொழிற் கல்லூரிகளின் சங்கம் - சுகாதாரம் அறிவியல் சங்கத்திற்கு அதன் உறுப்பு கல்லூரிகளில் விதிமுறைகளின்படி மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு 2011-2012-ம் கல்வியாண்டில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை பணியினை மேற்கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்து ஒருமனதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான சங்கத்திற்கு அதன் 67 உறுப்பு கல்லூரிகளில் விதிமுறைகளின்படி செவிலியர் பட்ட படிப்புகளுக்கு மட்டும் 2011-2012-ம் கல்வியாண்டில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை பணியினை மேற்கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்து ஒருமனதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இச்சங்களின் உறுப்பு கல்லூரிகளை அந்தந்த சங்கங்களின் வலைதளங்களில் சூசூசூ.சிடூஙீஙீஷஹஙூகீஙூ.ச்ஙுகி, சூசூசூ.சிடூஙுடூஙூஷஹ.ஷச்ஙி பார்த்து பெற்றோர்களும், மாணவர்களும் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களும் பெற்றோர்களும் அந்தந்த சங்கங்கள் வழங்கும் விண்ணப்பத்தினை பெற்று உரிய முறையில் விண்ணப்பித்து கல்லூரிகளில் சேர வேண்டும் என்று குழு அறிவித்துள்ளது.  மேற்படி இரு சங்கங்கள் தவிர வேறு சங்கங்களோ அல்லது பயிலகங்களோ தன்னிச்சையாக குழுவின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் மேற்படி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக்கூடாது என குழு அறிவித்துள்ளது. அவ்வாறு குழுவின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின்றி நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது எனவும் குழு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony