முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிவியல் துறையில் இந்தியர்கள் திறம்பட செயல்படுகிறார்கள்-ஒபாமா புகழாரம்

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஆக.- 20 - கணிதம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இந்தியர்களும், சீனர்களும் திறம்பட செயல்படுகிறார்கள் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். கடந்த 3 நாட்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, மின்னசோட்டா வடகிழக்கில் உள்ள அபோவா மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களின் கிராமப்புற பகுதிகளுக்கு சென்று பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு சூழல் ஆகியவை குறித்து உள்ளூர் மக்கள், வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.  இந்நிலையில் அட்கின்சன்  என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியது, 

கணிதம், அறிவியல், இயந்திரவியல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா, சீனா ஆகியவை முன்னிலையில் உள்ளன. இந்த துறைகளில் அமெரிக்கர்கள் கோலோச்சி வந்தது ஒரு காலம். இன்று இந்தியாவும், சீனாவும் நம்மை விஞ்சி திறம்பட செயல்படுகின்றனர். இதனால் வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை பெறுகிறார்கள். இது எனக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. கணிதம், அறிவியல், பொறியியல் துறைகளில் அமெரிக்கர்களும் மேம்பட வேண்டும். இதற்காக பள்ளிக்கூடங்களில் படிக்கும் போதே இப்பாடங்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். 

கணிதத்தில் புலியாகவும், கம்ப்யூட்டர் துறையிலும், தொழில்நுட்ப துறையிலும் நிபுணராக இருந்தால் மட்டுமே இன்றைய பொருளாதார நிலையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். அது போன்று ஆங்கிலத்தை தவிர பிரஞ்சு போன்ற வெளிநாட்டு மொழிகளையும் கற்க வேண்டும். இது வெளிநாடுகளிலும், பிற நாட்டு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை பெற உதவும் என்றார். அட்கின்சன் நகரில் நடைபெற்ற கூட்டத்துடன் அவர் கிராமப்புறங்களுக்கு பஸ்சில் செல்லும் 3 நாள் பயணத்தை நிறைவு செய்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்