முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 நாட்களில் 350 மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றிய முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், - ஆக - தி.மு.க. ஆட்சியில் அனைத்து வகையிலும் துன்பமடைந்து வந்த தமிழக மக்கள் முன்னேறும் வகையில் 3 வது முறையாக முதல்வராக பதவியேற்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஏராளமான தொலைநோக்கு திட்டங்களையும், மானியங்களையும், பயனுள்ள இலவச திட்டங்களை அறிவித்து மக்களுக்கு மகிழ்ச்சியையும், நன்மையையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். 100 நாட்களில் அவர் 350 நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. முதல்வர் அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 18 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்ற நிலையில் அவர் அறிவிக்காத ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
*படித்த ஏழை பெண்கள் திருமணத்திற்கு 4 கிராம் தாலிக்கு இலவச தங்கம்
* இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை அதிகரிப்பு
* முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள் உதவித் தொகை அதிகரிப்பு
*20 கிலோ இலவச அரிசி, அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி
* மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரிப்பு
* பெண் அரசு பணியாளர்களுக்கு 6 மாத கால பிரசவ விடுப்பு
* தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதம் அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்பு பணி அமல்படுத்த அரசின் சிறப்பு திட்டங்களை செம்மோடு விரைந்து செயல்படுத்திட புதிய துறை அமைப்பு
* நாடு குடியரசான பின்பு முதல் முறையாக ஜூன் 12 ம் தேதிக்கு முன்பு மேட்டூர் அணை திறப்பு
* காவல் துறை சுதந்திரமாக செயல்படவும், சட்டம் ஒழுங்கை சீர்படுத்த நடவடிக்கை
* மின்வெட்டு நேரம் குறைப்பு
* மூடப்பட்டிருந்த ஈரோடு, தமிழ்நாடு கூட்டுறவு நூல் பதனிடும் ஆலை திறப்பு
* தீ, மழை, வெள்ளத்தால் சேதமடையும் குடிசைகளுக்கு நிவாரணம் உயர்வு
* நிலப்பட்டா மாற்றம், வி.ஏ.ஓவிடம் பெற உத்தரவு
* வணிகவரித் துறை, மின்னணு கையடக்க கருவிகள் வழங்கல்
* மத்திய அரசு கேஸ் விலை உயர்த்திய போதும், சிலிண்டருக்கு ரூ. 15 குறைப்பு
* போக்குவரத்து மின்னணு ரசீது முறை, நடமாடும் சிக்னல் அமைப்பு
* தொழுநோயாளிகளுக்கான சிறப்பு ரேசன் கடை திறப்பு
* ஸ்ரீபெரும்புதூரில் பிரான்சு நாட்டு உதவியுடன் 4 ஆயிரம் கோடியில் புதிய கார் தொழிற்சாலை அமைக்க ஆலோசனை
* இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை
* ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி
* புதிய மகளிர் தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்
* புதிய துணை மின்நிலையங்கள்
* அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம், குளிர்சாதன வசதியுடன் அமரர் கிடங்கு
* நங்கநல்லூரில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
* முத்தரசநல்லூரில் ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை
* ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பேட்டரி கார்கள்
* ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்
* சோமரசம்பேட்டையில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்
* மணப்பாறை மரவனூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்
* அந்தநல்லூர் பெட்டவாய்த்தலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
* மணிகண்டம் இனாம்குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்வு
* காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு புத்துயிர்
* 17 பள்ளிகள் தரம் உயர்வு
* குளித்தலையில் காட்டாற்றின் குறுக்கே புதிய பாலம், சிறுபாலம்
* சாலை வசதிகள்
* புதிய வழித்தடங்களில் 10 பஸ்கள்
* 17 பாலங்கள்
* தமிழகம் முழுவதும் போக்குவரத்து சீரமைக்கும் வகையில் 3,000 புதிய பஸ்கள்
* 68 அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம்
* தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், மழைவாழ் பழங்குடியினர் மாணவ, மாணவியருக்கு பொறியியல் படிப்பில் சேர 35 மதிப்பெண்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 40 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு 45 மதிப்பெண்கள், பொதுப் பிரிவினருக்கு 50 மதிப்பெண்கள்கள் நிர்ணயிக்க பிரதமரிடம் கோரிக்கை.
* ஆதி திராவிட மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு
* கல்வி, வேலைவாய்ப்பில் பிற்பட்டோருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 20 சதவீதம், ஆதி திராவிட வகுப்பினருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் ஆக மொத்தம் 69 சதவீத இட ஒதுக்கீடு, வளமான பிரிவினரை நீக்கம் செய்யும் தொடர்ந்து கடைப்பிடிக்க உத்தரவு
* விவசாய பொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்துக்கு 4 சதவீத மதிப்பு கூட்டுவரி விலக்கு
* ஆதி திராவிட மாணவ விடுதியை பராமரிக்க நிதி ஒதுக்கீடு
* உலகில் முதல் முறையாக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை அடுத்தாண்டு தமிழகத்தில் நடத்த ஒப்புதல், ஆணை
* செங்கல், ஜல்லி, மணல் விலை குறைப்பு
* கச்சத்தீவை மீட்க சட்டசபையில் தீர்மானம்
* இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க மத்திய அரசுக்கு சட்டசபையில் கோரிக்கை
* ரமலான் 30 நாள் நோன்பு கஞ்சிக்கு 38.01 டன் இலவச அரிசி
* ஐகோர்ட் வளாகத்தில் மாற்றுமுறை தீர்வு மைய புதிய கட்டிடத்திற்கு அடிக்கல்
* ஸ்ரீரங்கம், திருநெல்வேலி, நாகலாபுரம், அரூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருச்சுழி, திருத்துரைப்பூண்டி, வேதாரண்யத்தில் கலைக் கல்லூரிகள்.
* தருமபுரி தியாகி சுப்பிரமணியசிவா மணிமண்டபம்
* தாலிக்கு 4 கிராம் தங்கம் பெற பொதுத் துறை வங்கிகள் மூலம் தங்க காசு பெற திட்டம்
* விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு
* வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர்
* 100 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு* போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க்குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐ.நா. சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமை வழங்க வேண்டும். இதற்காக இலங்கை அரசு மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம்
* துணி, துணி பொருட்கள் மீதான 5 சதவீத வாட் வரி ரத்து
* தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சிறைபிடிப்பதை தவிர்க்கப்பட, இலங்கைக்கான இந்திய தூதரிடம் வலியுறுத்தல்
* அரசு பஸ்களில் கையடக்க மின்னணு கருவி மூலம் பயணச்சீட்டு திட்டம்
* மாணவர்களுக்கு இலவச லேப்டாப், இலவச மிக்சி, கிரைண்டர், பேன்
* அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும் டிசம்பர் 3 ல் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஊதியத்துடன் விடுமுறை
* உரத்தட்டுபாடு, உர பற்றாக்குறையை போக்கவும், மண்ணெண்ணெய் அதிகளவு கொடுக்க பிரதமரிடம் வலியுறுத்தல்
* அரசு கேபிள் டி.வி. புணரமைப்பு
* தொட்டில் குழந்தை திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்
* மகளிர் சுகாதார வளாகங்களை புதுப்பிக்க நடவடிக்கை
* தமிழக ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர்களுக்கு உணவு உதவித் தொகை அதிகரிப்பு
* திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
* சாயக்கழிவுகளை சுத்திகரிக்க புதிய தொழில்நுட்பம்
* விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை, 200 கோடி வட்டியில்லா கடன்
* புதிய ரேசன் கார்டுகள் 60 நாட்களில் வழங்க உத்தரவு
* ஆன்லைன் மூலம் போலீசில் புகார் திட்டம்
* திண்டுக்கல்லில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாருக்கு முழு உருவ வெண்கல சிலை
* மருத்துவம், பொறியியல் படிப்புக்கு 100 மாணவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் உதவி
* 45 ஆண்டுகளாக போராடி வந்த திருநெல்வேலி சிவந்திபுரம் கிராமத்தினர் 2,780 பேருக்கு வீட்டு மனைப்பட்டா.
* சென்னை, சுற்றுப் பகுதியில் பிளாஸ்டிக், திடக்கழிவுகளை அகற்றி சென்னை நகரை தூய்மையாக்கும் திட்டம்
* பள்ளி குழந்தைகளுக்கு 2 செட் சீரூடை
* வசதியின்றி படிப்பை தொடர முடியாத 10, 11 ம் வகுப்பு மாணவர்கள் படிப்பை தொடர 11 ம் வகுப்புக்கு ரூ. 1,500, 12 ம் வகுப்புக்கு ரூ. 2,000 உதவித்தொகை
*  மீன்பிடி நகரங்களில் மீன் பதப்படுத்தப்படும் பூங்காக்கள்
* ஏழைகளுக்கு சூரிய மின்சாரத்துடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்துக்கு ரூ. 1,080 கோடி ஒதுக்கீடு
* வக்பு வாரியத்துக்கு மானியத் தொகை அதிகரிப்பு
* உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு
* வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளை மீட்க நடவடிக்கை
* திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்ட ஏரிகள், கால்வாய்கள் நவீனப்படுத்த ரூ. 110 கோடி ஒதுக்கீடு
* கோட்டூர் காவல் நிலையத்திற்கு ரூ. 40 லட்சத்தில் சொந்த கட்டிடம்
* அனைத்து காவல் நிலையங்களுக்கும் சொந்த கட்டிடம்
* எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மூலம் நாகை கல்லூரியில் படிக்க மாணவர்களுக்கு நிதியுதவி
* நலிந்த தொழிலாளர்கள் 92 பேருக்கு தலா ரூ. 25,000
* வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஏரிகளை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு
* ஆடு, கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
* தமிழ்நாட்டுக்கு போதுமான 21,000 டன் டி.ஏ.பி. உரத்தை மத்திய அரசு வழங்க கோரிக்கை
* தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை
* 22,000 சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பசும் தேயிலைக்கு கிலோவுக்கு ரூ. 2 கூடுதல் வழங்கி உத்தரவு
* தேனி மாவட்ட பள்ளிகள் பராமரிப்புக்கு ரூ. 38 லட்சம் மானியம்
* மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை தமிழகத்திற்கு விலக்கு அளிக்க பிரதமருக்கு கோரிக்கை
* நத்தம் துணை மின் நிலையத்திற்கு ரூ. 106.46 லட்சத்தில் புதிய உயர் அழுத்த மின்மாற்றி
* முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ஆயிரம் ஓய்வூதியம்
* தமிழக மக்களுக்கு கொடுப்பது போன்று அகதிகளுக்கும் அரசு உதவிகள்
* முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பிரதமருக்கு கடிதம்
* சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு 630 மெகாவாட் மின்சாரம் மலிவு விலையில் வாங்க நடவடிக்கை
* 2012 ஆகஸ்ட் மாதத்திற்குள் மின்வெட்டை முழுமையாக தீர்க்க நடவடிக்கைகள்
* கோயில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசைவாணர்கள், கிராம பூசாரிகளுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு
* பத்திரிக்கையாளர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு
* நுண்ணீர் பாசனத்திற்கு ரூ. 151 கோடி ஒதுக்கீடு
* சூரிய சக்தி மூலம் இயங்கும் ஒரு லட்சம் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை
* சுற்றுச் சூழலை பாதுகாக்க மரங்கள் நட நிதி ஒதுக்கீடு
* மாணவர்களுக்கு உதவித் தொகை அதிகரிப்பு
* 75 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க உத்தரவு
* மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு ரூ. 4,761 கோடி ஒதுக்கீடு
* விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடனுக்கு ரூ. 3,000 கோடி ஒதுக்கீடு
* அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரம் செயல்பட நடவடிக்கை.
* 60 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை.
* புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை
* விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை 5 ஆண்டுகளில் 2 முதல் 3 மடங்கு உயர்த்த புதிய திட்டங்கள்
* விவசாயத்தில் நவீன தொழில் நுட்பம்
* ஒருங்கிணைந்த விவசாய பண்ணை வளர்ச்சி திட்டம்
* பழங்கள், காய்கறிகள் உற்பத்தி திறனை மேம்படுத்த புதிய பண்ணை அமைத்தல்
* பசுமைகுடில் முறை
* விவசாய கடனுக்கு வட்டி குறைப்பு
* ஆதரவற்ற குழந்தைகள், முதியோருக்கு இலவச தங்கும் விடுதி
* பாதியில் படிப்பை நிறுத்தாமல் இருக்க மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 25 லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை
* பள்ளி மாணவர்களுக்கு முழுக்கால் சட்டை, மாணவிகளுக்கு சல்வார் கமீஸ், சுடிதார்
* அனைத்து மாணவ, மாணவியருக்கும் காலணிகள்
* சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா
* போடியில் அரசு பொறியியல் கல்லூரி
* நாகப்பட்டினத்தில் நவீன மீன்பிடி துறைமுகம்
* பூம்புகார், ராமேஸ்வரத்தில் மீன்பிடி துறைமுகங்கள்
* 7 கடலோர மாவட்டங்களில் 12 புதிய மீன் இறங்கு தளங்கள்
* எந்திர படகுகளில் ஆழ்கடல், சூரை மீன்பிடி தூண்டில் படகுகள் வாங்க 25 சதவீத மானியத்தில் ரூ. 5 லட்சம் வரை மீனவர்களுக்கு நிதியுதவி
* கடலோர பகுதிகளில் அரசு, தனியார் ஒத்துழைப்பின் மூலம் 13 மீன்பிடி நகரங்களில் மீன் பதப்படுத்தப்படும் பூங்காக்கள்
* 2011 - 2012 ம் ஆண்டில் 115 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி இலக்கு
* 106 கோயில்களுக்கு அன்னதான திட்டம் விரிவு
* ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளி
* மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு
* 10 புதிய அரசு தொழில்நுட்ப மையங்கள்(ஐ.டி.ஐ.)
* கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த திட்டங்கள்
* காவல் துறையை நவீனமாக்க நிதி ஒதுக்கீடு
* மக்கள் தொகை குறைவாக உள்ள 75 சிறிய நகரங்களில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை
* தமிழகம் முழுவதும் மக்கள் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவமனை அமைக்க உத்தரவு
* ஆதி திராவிட விடுதி மாணவர்களுக்கு உணவுப்படி உயர்வு
* கல்லூரி மாணவ, மாணவியருக்கும் உணவுப்படி அதிகரிப்பு
* அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டிடங்கள்
* மதுரை நாகனாபுரம், நாராயணபுரத்தில் படகு சவாரி
* காற்றாலை மூலம் பெறப்படும் 100 மெகா வாட் மின்சாரம், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு இரவு நேரங்களில் வழங்க நடவடிக்கை
* படிப்பில் இடை நிறுத்தத்தை தடுக்க மாணவர்களுக்கு ரூ. 5,000 டெபாசிட், படிப்பை முடித்தவுடன் பெற்றுக் கொள்ள ஏற்பாடு
* ஆலங்குளம், டி. கல்லுப்பட்டியில் புதிய தீயணைப்பு நிலையங்கள்
* அனைத்து குடியிருப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி
* கோயில்கள் தேர் சீரமைத்தல், கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை
* விவசாய நிலங்களை பாதுகாக்க பார்த்தீனியம் விஷ செடிகள் அழிப்பு
* விருதுநகர் ஆலங்குளம் அரசு சிமிண்ட் ஆலைக்கு ரூ. 165 கோடி நிதி ஒதுக்கி உற்பத்தியை இரு மடங்காக்க நடவடிக்கை
* பி.டி. பருத்தி சாகுபடிக்கு தடை
* விவசாயிகள் வாங்கிய கடனுக்கான ஜப்தி நிறுத்தம்
* சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்டம்
* நீலகிரி, கூடலூரில் யானை அகழி அமைக்க நடவடிக்கை
* வன விலங்குகளால் உயிரிழப்போருக்கு இழப்பீட்டு தொகை அதிகரிப்பு
* அட்மா திட்டத்திற்கு 1,300 பணியாளர்கள் நியமிக்க உத்தரவு
* வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கான உதவித்தொகை அதிகரிப்பு
* வன விலங்குகளால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு இழப்பீடு அதிகரிப்பு
* வேளாண்மை துறையினருக்கு புதிய வாகனங்கள்
* 10 உழவர் மையங்கள் அமைப்பு
* 50 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நவீன கிடங்குகள் வசதி
* விதை சுத்திகரிப்பு நிலையங்கள் நவீனமாக்க நடவடிக்கை
* விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த கையேடு
* காய்கறி விற்பனை மையங்கள் துவக்க நடவடிக்கை
* மலர்கள் சாகுபடிக்கு மாதிரி செயல் விளக்க மையம் அமைக்க நடவடிக்கை
* ஸ்ரீரங்கம், கோபி செட்டிபாளையத்தில் காய்கறிகள், பழங்கள், குளிர்பதன வசதியுடன் கூடிய வணிக வளாகங்கள்
* தேனி, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலியில் காய்கறி, பழங்கள், புளி, மிளகாய், எழுமிச்சைக்கென குளிர்பதன வசதியுடன் கூடிய சேமிப்பு கிடங்குகள்
* விவசாயிகளையும், வியாபாரிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வியாபாரிகளுக்கு என தனி கடைகள்
* விவசாயிகளுக்கான பொருளீட்டு கடன் தொகை அதிகரிப்பு
* ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு சொந்த கட்டிடங்கள்
*அரியலூரில் புதிய தொழில் மையம்
* கோவை, குமரியில் கயிறு குழுமங்கள் அமைக்க நடவடிக்கை
* தொழில் வளர்ச்சியை மேம்படுத்த கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், கல்வியாளர்கள், வங்கி அலுவலர்கள் கொண்ட தொழில் வளர்ச்சி ஆலோசனை குழு அமைக்க நடவடிக்கை
* ஊட்டி அரசு டீ விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை
* கயிறு பொருட்கள் உற்பத்தியை பெருக்க புது வசதி மையங்கள்
* அடுத்த ஆண்டு முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை
* இணைப்பு கேட்ட அனைவருக்கும் 2 லட்சம் மின் இணைப்புகள்
* காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை
* மின்துறை இருக்கை கிடங்குகளில் தி.மு.க. ஆட்சியில் ஒரு கிளாம்பு கூட இல்லை. அத்தனை உபகரணங்களும் வாங்க நடவடிக்கை
* ரூ. 2,196 கோடியில் மின்சாரம் உற்பத்திக்கான புதிய திட்டம்
* தி.மு.க. ஆட்சியில் சம்பளம் வழங்கப்படாத போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவு
* தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்கும் வகையில் தொழில் முனைவோரை ஈர்க்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் திட்டம்
* பெண் கல்வியை ஊக்குவிக்க முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாக்கும் திட்டம் செயல்படுத்துதல்
* ரூ. 222 கோடியில் துணை மின்நிலையம்
* 12 புதிய பாலங்களை திறக்க நடவடிக்கை
* பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் ரோடுகள்
* எண்டோசல்பான் பூச்சி மருந்து பயன்பாட்டுக்கு தடை
* சொட்டு நீர் பாசனத்திற்காக சிறு, குறு விவசாயிகளுக்காக 100 சதவீத மானியம், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம்
* தனியார் தயாரிக்கும் தரமற்ற உர விநியோகத்திற்கு தடை
* தமிழ் வளர்ச்சி துறைக்கு 12 ஜீப்புகள்
*அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம்
* 10, 12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு
* பள்ளிகளிலேயே ஜாதி சான்றிதழ்
* புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்
* ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுலா தளமாக அறிவிப்பு
* புராதன சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை
* சுற்றுச்சூழலை பாதுகாக்க சுகாதாரமான நகரங்கள் உருவாக்கல்
* தமிழக வளர்ச்சிக்கு பிரதமரிடம் 30 பக்க கோரிக்கை
* ரேசன் அரிசி கடத்துவோருக்கு குண்டர் சட்டம்
* போலி கூட்டுறவு சங்கங்களை களையெடுக்க நடவடிக்கை
* ரேசன் அரிசி, மணல், கிரானைட் கொள்ளையை தடுக்க நடவடிக்கை
* தீ விபத்தால் சேதமடையும் குடிசைகளுக்கு உதவித் தொகை அதிகரிப்பு
* விளையாட்டு துறையை மேம்படுத்த நடவடிக்கை
* உணவு உற்பத்தியை அதிகரிக்க ஆக்சன் பிளான்
* எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வு
* தமிழ் வெப்சைட்டுக்கு புதிய வடிவம்
* தமிழக நதிகள் இணைப்பு
* 40 ஆண்டுகள் பழமையான எண்ணூர் அனல் மின் எந்திரத்திற்கு பதிலாக 60 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் எந்திரம்
* தூத்துக்குடியில் 4 ம் நிலை மின் உற்பத்தி தொடக்கம்
* புதிய தொழில் கொள்கை
* மோனோ ரயில் திட்டம்
* புதிய உழவர் பாதுகாப்பு திட்டம்
* ஏழைகள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் புதிய திட்டங்கள்
* திண்டுக்கல், சிறுமலை கடமான்குளம் கிராமத்தில் 60 ஆண்டுகளாக இருட்டில் தவித்த கிராம மக்களுக்கு மின்சார வசதி
* நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி பெருக்கம், 2 ம் பசுமை புரட்சிக்கான நடவடிக்கை,
* அண்ணா பல்கலை குளறுபடிகள் நீக்கம்
* வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட சொத்துக்களை மீட்க புதிய சட்டம்
* சிறப்பு நகர்ப்புற வளர்ச்சி இயக்கம்
* நதிநீர் பிரச்சினைகளுக்கு சட்டப்படியான நடவடிக்கை
* தமிழ்நாடு 20, 25 புதிய திட்டம்
* முதியோர் பென்சன் வங்கிகள் மூலம் வழங்க நடவடிக்கை
* பண்ணைசார் சிறப்பு திட்டம்
* மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய தனிக்கொள்கை
* கூட்டுறவு அமைப்புகளுக்கு விலை கட்டுப்பாட்டு நிதி திட்டம்
* ஹஜ் பயணம் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு
* கிராம ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் புதிய திட்டம்
* ஆதரவற்ற மன நோயாளிகளை பாதுகாக்க அரசு உத்தரவு
* அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்
* புதிதாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தமிழக அரசு என்.ஓ.சி. வழங்கல்.
* மழைநீர் சேகரிப்பு புத்துயிர்
* நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்வு
* இந்தியா முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடந்த வேளையில் முதல்வர் முயற்சியால் தமிழகம் முழுவதும் லாரிகள் ஓட நடவடிக்கை
* மின்துறையில் 5,516 பகுதி நேர ஊழியர்கள் பணி நிரந்தரம்
* 55 துணை மின் நிலையங்கள்
*  2,500 கிலோ மீட்டர் மிக உயர் அழுத்த மின் பாதைகளுக்கு ரூ. 1,365 கோடி ஒதுக்கீடு
* கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரியில் மின் பகிர்மான வட்டம் அமைப்பு
* இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் முறை
* 2012 ல் மின் உற்பத்தி துவக்கப்பட உள்ள வட சென்னை அனல் மின் நிலைய பவானி கட்டளை தடுப்பணை,புனல் மின் நிலையங்களை இயக்க, பராமரிக்க 600 உதவி பொறியாளர்கள் பணியமர்த்த நடவடிக்கை
* வீணாகும் வெப்ப சக்தியை மீட்க வல்ல எரிசக்தி சேமிப்பு திட்டங்கள்
* அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் அபிவிருத்தி திட்டம்
* மாநகராட்சி பஸ் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு கழிப்பறைகள்
* மழைநீர் கால்வாய்கள்
* முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்
* ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட சட்டசபை கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை
* டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க மருத்துவ தேர்வு வாரியம் அமைத்தல்
* மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகங்களில் கூடுதல் கட்டிடம்
* பொதுமக்கள் நேரில் வரி செலுத்தவும், புகார் தெரிவிக்கவும் புதிய கட்டிடம்
* கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரிவாக்கம்
* சென்னைக்கு குடிநீர் வழங்கல் அதிகரிக்க திட்டம்
* குடிநீர் திருட்டை தடுக்க குடிநீர் ஊர்திகளில் புவியிடங்களை காட்டும் அமைப்பு பொருத்துதல்
* 39,000 ஏரி, குளங்களை தூர்வாரி புணரமைக்க நடவடிக்கை
* குடிநீர் ஆதார பகுதியான நீர் உறிஞ்சு கிணறுகள் பராமரிக்க நடவடிக்கை
* சென்னை தியாகராயர் நகரில் தானியங்கி அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை
* சைனா பஜாரில் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு பல அடுக்கு வளாகம்
* நவீன இறைச்சி கூடங்கள் அமைக்க நடவடிக்கை
* மயானங்களில் எரிவாயு தகன மேடைகள் அமைக்க நடவடிக்கை
* திறந்தவெளி கழிப்பிடங்களை மாற்ற உள்கட்டமைப்பு வசதி
* அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மேம்பாடு
* சென்னை சாலைகளை உலகதரத்திற்கு மேம்படுத்துதல்
* அரசு சிமிண்ட் ஆலைகளிலும் உற்பத்தி திறனை மேம்படுத்த புதிய திட்டங்கள்
* தமிழ்நாடு செய்தி தாள் காகித நிறுவனம் விரிவாக்கம்
* உப்பளங்கள் நவீனப்படுத்தி விரிவாக்கம்
* கனிம வளங்களை பாதுகாத்தல்
* சுரங்க துறைகளை செயற்கை கோள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை
* சிறு தொழில் முனைவோருக்கு குறைந்த வட்டியில் கடன்
* சர்க்கரை ஆலைகளை மேம்படுத்தி உற்பத்தியை பெருக்கவும் 183 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம்
* போலி ரேசன் கார்டுகளை களைய மின்னணு குடும்ப அட்டை திட்டம்
* பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்
* திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்தல்
* திருநங்கைகளுக்கு சுய தொழில் தொடங்க 25 சதவீத மானியத்தில் ரூ. 15 லட்சம் வரை கடனுதவி
* இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள 416 மகளிர் சுய உதவி குழுவினருக்கு 10,000 சுழல் நிதி
* முகாம்களில் உள்ள குடும்பத்தினருக்கு மாத உதவித்தொகை அதிகரிப்பு
* கூட்டுறவு அமைப்பு முறைசாரா பிரிவுகளில் உள்ள நெசவாளர்களை நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை, அவர்களுக்கு தனி நபர் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை
* அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடுகள் குறித்த கோரிக்கைகளுக்கு பரிசீலனை
* வாட் வரியில் விலக்கு அளிக்கப்பட்ட சிறு, குறு வணிகர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை, உறுப்பினர் சேர்க்கை கட்டணத்தில் சலுகை, புதுப்பித்தல் கட்டணமான ரூ. 100க்கு பதிலாக சேரும் போது ரூ.500 செலுத்தி ஆயுட்கால உறுப்பினராக்க திட்டம்
* நெல்லையில் கால்நடை மருத்துவக்கல்லூரி
* உணவு தானிய சேமிப்பு கிடங்கு அமைத்தல்
* 50 புதிய தொழில் தொகுப்புகள் துவக்க நடவடிக்கை
* தொழில்துறைக்கான கட்டமைப்பை மேம்படுத்த முதல்வர் தலைமையில் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைத்தல்
* கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டம்
* 11,931 கோயில்களுக்கு ஒரு கால பூஜைக்காக நிதி ஒதுக்கீடு
* மகப்பேறு நிதி உதவி உயர்வு
* உணவு பாதுகாப்பு மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்திற்கு தனி ஆணையம் உருவாக்கல்
* பால் கொள்முதலை அதிகரிக்க 10 புதிய பால்பண்ணை உருவாக்க நடவடிக்கை
* தஞ்சாவூரில் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஓசூரில் உலகத் தரம் வாய்ந்த கோழி வளர்ப்பு மையம்
* தானியங்கி மின் கட்டண மையங்கள்
உட்பட 350 திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து தமிழக மக்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்