முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதி படைத்தவர்கள் கடைக்கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு அரசு திட்டங்கள் சென்றடையும்-ஆர்.பி.உதயகுமார்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

விருதுநகர், ஆக. - 21 - தகுதி படைத்தவர்கள்  எந்த கடைக்கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் சென்றடையும் பொறுப்பை தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா எங்களுக்கு வழங்கியுள்ளார் என சாத்தூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். இதுபற்றிய விபரம் வருமாறு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மு.பாலாஜி தலைமை தாங்கினார். விழாவிற்கு  தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சாத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு மக்களை நாடுகிற அரசு, கடந்த ஆட்சியோ அரசை தேடி மக்கள் சென்ற அரசு. தற்போது மக்களை தேடி அரசு செல்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க நிதி நிலை அறிக்கையை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி வாக்குறுதிகள் அனைத்தையும் 1 1/2 வருடத்தில் நிறைவேற்வேன் என கூறி பாடுபட்டுவருகிறார். அதற்கு தடையாக எத்தனை தடைகள் வந்தாளும் அவற்றை சுக்குநூறாக உடைத்து போராடி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் தொகுதியில் 27 ஆண்டுகளாக திட்டங்கள் எதுவுமின்றி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிவந்ததனர். தற்போது சாத்தூர் தொகுதி சாமானிய மக்களும் கல்வி பெற தமிழக முதல்வர் அரசு கலைக்கல்லூரி வழங்கியுள்ளார். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படாமல் கிடந்த ஆலங்குளம் சிமிண்ட் ஆலையை செயல்படுத்த ரூ165 கோடி ஒதுக்கியுள்ளார். 

சாத்தூர் தொகுதிக்கு சீவலப்பேரி திட்டம் மூலம் 22 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. தகுதி படைத்தவர்கள் எந்த கடை கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு திட்டங்கள் சென்றடைய வேண்டிய பொறுப்பை தமிழக முதல்வர் எங்களுக்கு வழங்கியுள்ளார் என பேசினார். பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் திட்டங்கள் சென்றடையும். தமிழக தலைவர்களில் மனிதநேயம்மிக்க தலைவர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர், தர்மசிந்தனை கொண்ட தலைவர், சிறந்த நிர்வாக திறமை கொண்ட தலைவர் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓமந்தூரில் அமைந்துள்ள சட்டசபையை உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் டெல்லியில் இருக்கும் மருத்துவவசதிகளை விட கூடுதலாக இருக்கும் அளவிற்கு மருத்துவமனையும், மருத்துவக்கல்லூரியும் ஏற்படுத்த படம் என தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணையின் மொத்த வடிவம். காலத்தில் கொடுத்தால்தான் அது நிவாரணம் காலம் தாழ்த்தி கொடுத்தால் அது நிர்வாணம். கடந்த வாரம் பட்டாசு வெடிவிபத்து நடைபெற்றது. பட்டாசு வெடிவிபத்து நடந்து 2,3 நிமிடங்களில் நாங்கள் அங்கு சென்றுவிட்டோம். சென்று மீட்புபணிகளை துரிதப்படுத்தினோம். விபத்திற்கான காரணங்கள் தமிழக முதல்வரிடம் தெரிவித்தோம். தமிழக முதல்வரிடம் சொன்ன மறுநிமிடம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார். மொத்தத்தில் விபத்து நடந்த 1 மணி நேரத்தில் நிவாரணத்தொகை அறிவித்த கருணைத்தாய் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா என தெரிவித்தார்.

முன்னதாக கழக மாவட்ட செயலாளரும், சிவகாசி சட்டமன்ற உறுப்பினருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில் கடைகோடியில் உள்ள ஏழைகளுக்கு அரசின் திட்டங்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் நோக்கம். பாட்டாளி நமது கூட்டாளி என அவர்களுக்காக பாடுபட்டு திட்டங்கள் தீட்டி வருகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்கள் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் தெரிவிக்கையில் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மேலான சிறப்பான மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். உங்களுக்காக உழைக்கின்ற அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு. ஏழைகளுக்காக உழைக்கின்ற அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு. மக்களுக்கு பயனளிக்ககூடிய அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு என பேசினார். 

விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,சமூக நலத்துறை, வேளாண்மைத்துறையின் சார்பில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, திருமண உதவித்தொகை,நலிந்தோர் உதவித்தொகை ஆகிய உதவித்தொகைகள் வேண்டி பெறப்பட்டுள்ள மனுக்கள் சரிபார்க்கப்பட்டு அதில் தகுதியான 2730 பயனாளிகளுக்கு ரூ 3 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமன் கலந்துகொண்டார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்மொழி அமுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

அரசு நலத்திட்ட விழாவில் மாவட்ட கழக செயலாளரும், சிவகாசி  சட்டமன்ற உறுப்பினருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, கழக மகளிரணி இணை செயலாளர், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் தினேஷ்பாபு, மாவட்ட மகளிரணி செயலாளர் கெளரிநாகராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், சாத்தூர் நகர செயலாளர் வாசன், தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், ஒன்றிய செயலாளர் சுப்புராம், மாணவரணி செயலாளர் செல்வகணேஷ் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்