முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய தம்பிதுரை வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஆக.- 21 - மருத்துவம், பொறியியல் படிப்புக்கு பொது நுழைவு தேர்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை மக்களவையில் வலியுறுத்தினார்.  மக்களவையில் தம்பிதுரை எம்.பி. பேசும் போது, தமிழக முதல்வரின் கோரிக்கைப்படி தாய்மொழியில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொறியியல், மருத்துவம் போன்றவற்றுக்கான நுழைவு தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அவ்வாறு நடத்த வேண்டும் என்ற பட்சத்தில் ஆங்கிலம், இந்தியில் மட்டும் இல்லாமல் அந்தந்த மாநில மொழிகளிலும் நுழைவு தேர்வை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பொது நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுடன் தாய்மொழியில் 12 வது வகுப்பில் பெற்ற மதிப்பெண்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்