முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ.சோதனைக்கு எதிர்ப்பு ஜெகன்மோகன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விலகமுடிவு

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

ஐதராபாத்,ஆக.- 21 -   ஜெகன் மோகன் அலுவலகங்களில் சி.பி.ஐ.சோதனை நடத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெவிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், கடப்பா தொகுதி எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது சி.பி.ஐ.வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனால் ஜெகன்மோகன் அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள அவரது நிறுவனங்களில் இந்த சோதனை நடந்தது. இந்த சி.பி.ஐ. சோதனை ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெகன்மோகன் அலுவலங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு அவரது தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கொடும்பாவியை எரித்தனர்.  இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜெகன்மோகன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்தில் உள்ள ஜெகன்மோகன் வீட்டில் அவசர ஆலோசனை நடத்தினர்.  ஜெகன்மோகன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 24 பேர் உள்ளனர். இதில் 14 எம்.எல்.ஏ.க்கள் இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஜெகன்மோகன் மீது சி.பி.ஐ.வழக்குப்பதிவு செய்ததற்கும், சோதனை நடத்தியதற்கு கடும்எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.  ஜெகன்மோகன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் விலகல் முடிவால் ஆந்திரா அரசுக்கு சிக்கல் ஏற்படும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago