முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்கு எதிராக 10 லட்சம் இளைஞர் படை: பா.ஜ.க அமைக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஆக.- 22 - ஊழலற்ற சமுதாயம் ஏற்படுத்தும் வகையில் 10 லட்சம் இளைஞர்களை கொண்ட யுவவாஹினி என்ற அமைப்பை ஏற்படுத்த பா.ஜ.க தீர்மானித்துள்ளது என்று அதன் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் சவுடேகர் தெரிவித்தார்.  டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, ஊழலற்ற சமுதாயத்தை ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய அளவில் சுமார் 10 லட்சம் இளைஞர்களை கொண்ட யுவவாஹினி என்ற அமைப்பை உருவாக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். லோக்பால் மசோதாவில் பிரதமரையும் இணைப்பதற்கு மன்மோகன்சிங் ஆரம்பத்தில் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அது தனிப்பட்ட கருத்து எனவும் கொள்கை அளவிலான முடிவு அல்ல என்றும் கூறி விட்டார்.
லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவதில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது அர்த்தமற்றதாகி விட்டது. தற்போது ஹசாரேயின் போராட்டம் வலுவடைந்து வருவதையடுத்து லோக்பால் மசோதாவில் பிரதமர் பதவியை சேர்ப்பதற்கு தனது ஆதரவை மன்மோகன்சிங் தெரிவித்து மீண்டும் பல்டியடித்துள்ளார். ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் இப்போது நடைபெற்று வரும் போராட்டம் பிரதமருக்கு எதிராக அவருடைய அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் நம்பிக்கையில்லா போராட்டமாகும்.
ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் நடைபெறும் போராட்டங்களை மத்திய அரசு நசுக்கி வருகிறது. அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் விலகியதோடு பிரச்சினை முடிந்து விட்டதாக அரசு கருதுகிறது. அவர்கள் மீது ஏன் இதுவரை தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித், தயாநிதி மாறன் போன்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அரசு மவுனம் சாதிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்