முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.நிலைக்குழுவின் பரிசீலனையில் ஹசாரேயின் லோக்பால் வரைவு மசோதா

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.- 22 - பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அண்ணா ஹசாரேயின் மக்கள் லோக்பால் வரைவு மசோதாவை பெரேலி பாராளுமன்ற தொகுதி எம்.பி. பிரவீன் சிங் ஆரோன் அனுப்பிவைத்தார். ஊழலை அடியோடு ஒழிக்க உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரேவுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இதனையொட்டி மத்திய அரசு போக்கில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு தயாரித்துள்ள லோக்பால் மசோதாவை காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் அண்ணாஹசாரே தலைமையிலான குழு தயாரித்த லோக்பால் வரைவு மசோதாவை ஆய்வு செய்ய பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு எம்.பி. ஆரோ அனுப்பிவைத்துள்ளார். இந்த மசோதாவை ஆய்வு செய்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து சிங்வி தலைமையிலான பார்லி.குழு முடிவு செய்யும். லோக்பால் மசோதாவில் அண்ணா ஹசாரேயின் யோசனைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படும் இந்த நேரத்தில் ஹசாரேயின் லோக்பால் வரைவு மசோதாவை பார்லி.நிலைக்குழுவின் ஆய்வுக்கு காங்கிரஸ் எம்.பி. ஆரோ அனுப்பி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மக்கல் லோக்பால் மசோதாவை தனிநபர் மசோதாவாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா எம்.பி. வருண்காந்தி ஏற்கனவே நோட்டீசு கொடுத்துள்ளார். ஆனால் வருண் காந்தியின் நோட்டீஸ் எடுத்துக்கொள்ளப்படுமா இல்லையா என்பது குறித்து சந்தேகம் இருக்கிறது. ஒரு தனிநபர் மசோதாவை சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் நோட்டீஸ் கொடுத்து குறைந்தது ஒருமாத கால அவகாசம் தேவை. நடப்பு பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்னும் ஒருமாத காலம் நடக்குமா என்பது தெரியவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்