முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலுக்குள் காற்றாலை மூலம் மின் உற்பத்தி: அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஆக.- 22 - காற்றாலை மூலம் மின் பண்ணை ஒன்றை கடலுக்குள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னை எம்.ஜி.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அதிகளவில் பயன்படுத்த தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாக ஊக்குவித்து வருகிறது. ருங்காலத்தில் சுற்று சூழல் மாசுபடுவதை குறைக்கவும் இந்த முயற்சி நடந்து வருகிறது. காற்றாலைகள் மூலம் முதன் முதலில் தூத்துக்குடி மாவட்டத்தில் 55 கிலோவாட் திறனுள்ள 10 காற்றாலைகளை செயல் விளக்கத்துக்காக நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி, நெல்லை, கோவை மாவட்டம் ஆகிய இடங்களில் காற்றின் வேகம் மற்றும் அடர்த்தி மின்சார உற்பத்திக்கு பெரிதும் உகந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு கடல் பகுதியில் காற்று வளமிக்கதாக உள்ளது. எனவே செயல் விளக்க காற்றாலை மின் பண்ணை ஒன்றை கடலுக்குள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூலை 31 வரை காற்றாலை மின் உற்பத்தியின் மொத்த நிறுவுதிறன் 6 ஆயிரத்து 926 மெகா வாட் ஆகும். சிறிய கோழிப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் கழிவுகளில் இருந்து மின் உற்பத்தி செய்யும் எரிவாயு கலன் அமைக்க சுமார் 12 திட்டங்களை செயல்படுத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ரூ. 115 லட்சம் மானியம் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago