முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் கடத்தப்பட்ட சிறுவனை மீட்டது எப்படி? எஸ்.பி நரேந்திரநாயர் பேட்டி

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி ஆக - 22 - தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். சினிமா பட தயாரிப்பாளர். இவரது மனைவி பிளவர் 16வது வார்டு கவுன்சிலர். இவர்களது மகன் விஷால்உமேஷ் (வயது 4). விஷால்உமேசை கார் டிரைவர் பாலகருப்பசாமி அவரது நண்பர்கள் உதவியுடன் கடத்தி நாடகமாடினார். இது தொடர்பாக பாலகருப்பசாமி மற்றும் அவரது நண்பர் தாளமுத்து நகரை சேர்ந்த மாரிமுத்து, புதுக்கோட்டை ஜமீன் நல்லமலையை சேர்ந்த மகேஷ், பெருங்குளத்தை சேர்ந்த லட்சுமி காந்தன், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெகநாதன், தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த முருகேஷ் ஆகியோரை கைது செய்தனர். சிறுவனை மீட்டது குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி. நரேந்திர நாயர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- விஷேல்உமேஷை கடத்திய கார் டிரைவர் பாலகருப்பசாமி கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் ராஜ்குமாரிடம் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். ஆடம்பர வாழ்க்கைக்காகவும் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையிலும் கடந்த 17ம் தேதி விஷேல் உமேஷை பள்ளிக்கு அழைத்து செல்லும் போது நண்பர்கள் உதவியுடன் கடத்தினார். 

பின்னர் செல்போன் மூலம் ராஜ்குமாரிடம் பேசி 5 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். ராஜ்குமார் போலீசில் புகார் செய்ததை அடுத்து விஷால்உமேசை மீட்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் பணம் கேட்டு மிரட்டியதை அடுத்து பணம் கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து ராஜ்குமாரை பணம், நகைகளுடன் கடத்தல்காரர்கள் பணம் வாங்க இருந்த பகுதியான புத்குகோட்டை பாலம் அருகே அனுப்பிவைத்தோம். அவருடன் சீருடை அணியாத போலீசாரும் சென்றனர். 

அங்கு பணம் வாங்க வந்த மகேஷ் சீறுடை அணியாத போலீசாரை ரவுடி என நினைத்து அங்கிருந்த தப்பி சென்று விட்டான். பின்னர் ராஜ்குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசிய மகேஷ் பணம் கொடுக்க வரும்போது ரவுடிகளை ஏன் அழைத்து வந்தாய் என கூறினார். மேலும் பணத்தை மதுரை ஏர்போர்ட்டுக்கு கொண்டு வரும்படி கூறினார். இதைத்தொடர்ந்து மதுரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

இந்நிலையில் கடத்தல்காரர்களை சுட்டுபிடிக்க போலீசார் முடிவுசெய்திருப்பதை அறிந்த மகேஷ் பயத்தில் விஷால்உமேஷை புதூர்பாண்டியாபுரம் விலக்கு அருகில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். சிறுவனுடன் பாலகருப்பசாமியும் வந்து யாரோ கடத்தியது போல் நாடகமாடினார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பாலகருப்பசாமி சிக்கிகொண்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம் மகேஷ், முருகேசன், ஜெகநாதன், லட்சுமிகாந்தன், மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 பைக், 3 கத்திகள், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு எஸ்பி.நரேந்திரநாயர் கூறினார். அப்போது ஏடிஎஸ்பி. சோனல்சந்திரா உடன் இருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago