முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இந்திய அணி பாலோ ஆன் ஆனது டிராவிட் சதம் அடித்தும் வீண்

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

லண்டன், ஆக. - 22  - இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டனில் நடைபெற்று வரும் 4 -வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பா லோ ஆன் ஆனது. டிராவிட் சதம் அடித்தும் பலனில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக் கெட்டையும் இழந்து 300 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதில் டிராவிட் மட்டும் சதம் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் யாரும் அரை சதத்தை தாண்டவில்லை.  இதனால் இந்திய அணி பாலோ ஆன் ஆனது. இந்திய அணி இங்கிலா ந்து அணியை விட தற்போது 291 ரன் பின்தங்கி உள்ளது. நேற்று 4 - வ து நாள் ஆட்டம் நடந்தது. இன்று கடைசி மற்றும் 5 -வது நாளாகும்.  இங்கிலாந்து அணி தரப்பில், பிரஸ்னன் மற்றும் ஸ்வான் இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். வேகப் பந்து வீச்சாளர்களான ஆண்டர்ச ன் மற்றும் பிராட் இருவரும் தலா 2 விக்கெட் எடுத்தனர்.  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் அருகே உள்ள ஓவல் மை தானத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.  இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முத ல் இன்னிங்சில் அபாரமாக ஆடி பிரமாண்டமான ஸ்கோரை எட்டிய து. அந்த அணி சார்பில் ஒரு வீரர் இரட்டை சதமும், ஒரு வீரர் சதமும் அடித்தனர்.  மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இயான் பெல் அதிகபட்சமாக 364 பந் தில் 235 ரன்னை எடுத்தார். இது டெஸ்ட் போட்டியில் அவருக்கு முத லாவது இரட்டை சதமாகும். பீட்டர்சன் 232 பந்தில் 175 ரன்னை எடுத் தார்.
தவிர, பொபாரா 44 ரன்னையும், கேப்டன் ஸ்ட்ராஸ் 40 ரன்னையும், குக் 34 ரன்னையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில், ஸ்ரீசாந்த் 3 விக்கெட் எடுத்தார். ரெய்னா 2 விக்கெட்டையும், இஷாந்த் சர்மா 1 விக்கெ ட்டும் எடுத்தனர்.
பின்பு ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 94 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 300 ரன்னை எடுத்தது. துவக்க வீரராக இறங் கிய டிராவிட் மட்டும் தாக்குப் பிடித்து ஆடி இறுதிவரை ஆட்டம் இழ க்காமல் இருந்தார்.
டிராவிட் 266 பந்தில் 146 ரன்னை எடுத்தார். இதில் 20 பவுண்டரி அடக் கம். அமித் மிஸ்ரா 77 பந்தில் 43 ரன்னை எடுத்தார். ஆர். பி. சிங் 23 பந்தில் 25 ரன்னை எடுத்தார். டெண்டுல்கர் 23 ரன்னை எடுத்தார். சே வாக் (8), லக்ஷ்மண் (2), ரெய்னா(0), தோனி (17), காம்பீர் (10) ஆகி யோர் குறைந்த ரன்னில் அவுட்டானார்கள்.
இங்கிலாந்து அணி தரப்பில் வேகப் பந்து வீச்சாளரான பிரஸ்னன் 54 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். முன்னணி சுழற் பந்து வீச்       சாளரான ஸ்வான் 102 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவி ர, ஆண்டர்சன் மற்றும் பிராட் இருவரும் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இந்திய பேட்ஸ்மேன்கள் கடந்த 3 டெஸ்ட் போலவே இதிலும் ஆடி வருகின்றனர். இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும். இந்தப் போட்டி யையாவது இந்திய வீரர்கள் டிரா செய்வார்களா?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்