முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டுகோள்

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஆக.23 - அணு சக்தியை ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்திற்கு சென்றார். டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார். 

பிறகு கொல்கத்தாவில் சஹா அணு சக்தி ஆராய்ச்சி நிலையத்தின் 60 வது ஆண்டு விழாவில் பிரதமர் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் அணு சக்தியை ஆக்கப்பூர்வ காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பசுமை எரிசக்தியை பயன்படுத்துவதில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றும் அதில் அணு சக்தியையும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு அணு சக்தி அவசியம் என்றும் நாட்டின் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிக்க அணு சக்தி அவசியம் என்றும் அவர் கூறினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மன்மோகன் சிங் சஹா அணு சக்தி ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளையும் வழங்கி கவுரவித்தார்.

இவ்விழாவில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்க கவர்னர் எம்.கே. மோகன்  காந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்