ஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வுக்கு தமிழகத்தை சேர்ந்த 230 பேர் தகுதி

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      தமிழகம்
iasexction

 

சென்னை,மார்ச்.- 5 - ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து 230 பேர் தேர்வு பெற்று நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். 

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் 965 ஐ.ஏ.எஸ். பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வில் 3.48 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் 12 ஆயிரத்து 545 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த 844 பேரும் அடங்குவர். 

கடந்த வியாழக் கிழமை வெளியிடப்பட்ட முதன்மை தேர்வு முடிவுகளில் இந்தியா முழுவதும் ஆயிரத்து 930 பேர் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 230 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயின்ற 68 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேர்முகத் தேர்வு இம்மாதம் 22 ம் தேதி தொடங்க உள்ளன. நேர்முகத் தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: