முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரே எடை 5 கிலோ குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.23 - ஊழலுக்கு எதிராக ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் உடல் நிலை 5 கிலோ குறைந்துள்ளது. இதனால் அவரது சிறுநீரகமும், கல்லீரலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் அன்னா ஹசாரேவை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவரது உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் குறித்து தினமும் ஆய்வு செய்கிறது. நேற்று காலையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது ரத்த அழுத்தம் 130/80 ஆகவும் இதயத்துடிப்பு 90 ஆகவும் இருப்பதாக தெரிவித்தனர். 72 கிலோ எடையுடன் கூடிய அவர் 5 கிலோ குறைந்து தற்போது 67 கிலோவில்தான் உள்ளார். அன்னா ஹசாரேவின் உடல்நிலை திருப்திகரமாக இருந்தாலும் அவரது எடை குறைவு கவலையளிப்பதாக உள்ளது. அவரது ரத்தத்திலும், சிறுநீரிலும் கேடோன் அளவு குறைந்துள்ளது.  இது மெல்ல மெல்ல ஹசாரேவின் சிறுநீரகத்தையும் கல்லீரலையும் பாதிக்கும் அபாயமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அன்னாவை கோமா நிலைக்கு தள்ளிவிடும் என்று போராட்டக் குழுவினர் பயப்படுகின்றனர். தற்போது அன்னா ஹசாரே தினமும் செய்யும் யோகா பயிற்சிகளை நிறுத்திவிட்டார். நேற்று அவர் மேடையில் படுத்தே கிடந்தார். இதுகுறித்து கிரன்பேடி கூறுகையில், காந்தியவாதி ஹசாரே 7 நாட்களாக சாப்பிடாமல் இருக்கிறார். அரசு இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்