முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்சினாட்டி டென்னிஸ் - லியாண்டர் - மகேஷ் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், ஆக. 23 - அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென் னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஜோடி வெற்றி பெற்று சாம் பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி வெற்றிக்காக கடுமையாக போராடிய து. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த ஆட்டத்தின் இறுதி யில், இந்திய ஜோடி பிரான்ஸ் மற்றும் செர்பிய இணையை தோற்கடி த்து பட்டத்தை தனது வசமாக்கியது. 10 வருட இடைவெளிக்குப் பிற கு இந்திய ஜோடி இங்கு பட்டம் வென்றுள்ளது. 

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரத்தில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்றது. இது நேற்றுடன் முடிவடைந்தது. 

ஆடவருக்கான ஏ.டி.பி. மற்றும் மகளிருக்கான டபிள்யு. டி. ஏ. ஆகிய இரண்டு சங்கமும் இணைந்து சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியை வெகு விமர்சையாக நடத்தின. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்தனர். இதற்காக அவர்கள் தீவிர பயிற்சியுடன் களம் இறங்கினர். 

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி பட்டம் பெற முயற்சித்தனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்க ள் வியப்பில் ஆழ்ந்தனர். 

ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் லி யாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஜோடியும், பிரான்ஸ் மற்றும் செர்பிய இணையும் பலப்பரிட்சை நடத்தின. 

மிகுந்த பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி 7 - 6( 4), 7 - 6 (2) என்ற செட் கணக்கில் மைக்கேல் லோத்ரா மற்றும் நெனாட் ஜிமோன்ஜிக் இணையை வீழ்த்தியது. இந்த இறுதிச் சுற்று சுமார் ஒரு மணி மற்றும் 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் லியாண்டர் மற்றும் பூபதி ஜோடி 3 -ம் நிலை ஜோடியாகும். இதில் தோல்வி அடைந்த பிரான்ஸ் மற்றும் செர்பிய இணை 4 -ம் நிலை ஜோடியாகும். 

இன்டியன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இந்திய ஜோடி இந்த சீச னில் பெரும் 3 -வது பட்டம் இதுவாகும். இதற்கு முன்னதாக, சோனி எரிக்சன் ஓபன் மற்றும் சென்னை ஓபன் ஆகிய பட்டத்தை வென்று இருந்தன. 

இந்த வெற்றி குறித்து லியாண்டரிடம் கேட்ட போது, 10 வருடத்திற்கு முன் இங்கு மீண்டும் வெற்றி பெறுவீர்களா என்று என்னிடம் கேட்டு இருந்தால், நான் பலமாக சிரித்து இருப்பேன். ஏனெனில் 10 வருடத்தி ற்குப் பிறகு நான் இங்கு விளையாடுவேனா என்ற சந்தேகமே அது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்