முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுடன் லாரி அதிபர்கள் இன்றும் தொடர்ந்து பேச்சு

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.23 - மத்திய அரசுடன் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இன்றும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இன்றும் தீர்வு ஏற்படாவிட்டால் நாடு முழுவதும் இந்த போராட்டத்தை விரிவுபடுத்தப் போவதாக லாரி அதிபர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுங்க வரியை குறைக்க வேண்டும். டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 ம் தேதி நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் தங்களது காலவரையற்ற போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

நாமக்கல்லில் கோடிக்கணக்கான முட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அரசு நேற்று லாரி அதிபர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியது. மத்திய அமைச்சருடன் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் இன்றும் பேச்சுவார்த்தை நீடிக்கும் என தெரிகிறது. அப்போதும் ஒருவேளை உடன்பாடு ஏற்படாவிட்டால் தங்களது போராட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தப் போவதாக லாரி அதிபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அவ்வாறு நாடு முழுவதும் போராட்டம் நடந்தால் விலைவாசி கடுமையாக உயரும் என்று அஞ்சப்படுகிறது. லாரி அதிபர்கள் போராட்டத்தால் 6 மாநிலங்களில் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்