எம்.ஜி.ஆர்-ரின் சத்துணவு திட்டத்துக்கு ஈடு இணை கிடையாது

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக 23 -  எம்.ஜி.ஆர். 1982-ல் கொண்டு வந்த சத்துணவு திட்டத்துக்கு ஈடு இணையான திட்டம் எதுவும் இல்லை என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பள்ளி கல்வி, உயர் கல்வி மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கிள்ளியூர் காங்கிரஸ் உறுப்பினர் ஜான் ஜேக்கப் பேசும்போது, மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். அப்போது எம்.ஜி.ஆர். காமராஜர் எனது தலைவர், அண்ணா எனது வழிகாட்டி என்று கூறினார். பின்பு காமராஜர் மதிய உணவு திட்டத்தை பார்த்து எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் கொண்டு வந்தார் என்றார். 

அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, ஜான் ஜேக்கப் பேசும்போது காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார். அதை பார்த்து எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் கொண்டு வந்தார் என்றார். நான் அந்த கருத்திலிருந்து மாறுபடுகிறேன். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் ஒரு சில வகுப்புகளில் மட்டும்தான் அமுல்படுத்தினார்கள். ஆனால் 1982-ல் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்டம் முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும், அனைத்து பள்ளிகளுக்கும், கருவுற்ற தாய்மார்கள், முதியோர் உதவி பெறும் முதியோர்களுக்கும் வழங்கப்பட்டது. 

1982-ல் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது அனைவரும் கேலியும், கிண்டலும் செய்தனர். காங்கிரசாரும் கேலியும், கிண்டலும் செய்தனர். தி.மு.க.வினர் மாணவர்களை பிச்சை தட்டு ஏந்த வைக்கின்றனர் என்று கேலி பேசினர். ஆனால் இன்று மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளும் அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளது. சத்துணவுக்கு ஈடு இணையான திட்டம் எதுவும் கிடையாது என்றார்.

Trisha & Vishaal pair up for new film | Cine Gossips

Johnny Movie Review | Top Star Prashanth | Sanchita Shetty | Vetriselvan | Thiagarajan

Thuppakki Munai Review | Vikram Prabhu | Hansika | Movie Review | Thinaboomi

ஆன்மிகம் என்றால் என்ன | Aanmeegem | Brahma Kumaris Tamil | Arivom AanmeegamTamil

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்: