முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25 மாவட்டங்களில் புதிய காவல் நிலையங்கள்

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை ஆக.23 -  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (22.8.2011) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் 45 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகம் ஆகியவற்றிற்கான கட்டடங்களைக் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காவல் துறையில் பல்வேறு புதிய கட்டமைப்புகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் ஏற்படுத்தி இந்தியாவிலேயே தமிழக காவல் துறையை முதன்மையான காவல் துறையாக  மாற்றுவதற்கு பல்வேறு முனைப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். சென்னை மாவட்டம் ​ செயின்ட் தாமஸ் மவுண்ட், காஞ்சிபுரம் மாவட்டம் ​ ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் மாவட்டம் ​ வெங்கல், திருச்சி மாவட்டம் ​ சோமரசன்பேட்டை, அரியலூர் மாவட்டம் ​ இரும்புலிகுறிச்சி, பெரம்பலூர் மாவட்டம் ​ பாடலூர், மதுரை மாவட்டம் ​ திருமங்கலம், சிவகங்கை மாவட்டம் ​ மதகுப்பட்டி, கல்லல், புழுதிப்பட்டி மற்றும் வந்தி, திண்டுக்கல் மாவட்டம் ​ அம்மைநாயக்கனூர் மற்றும் தாடிக்கொம்பு, விருதுநகர் மாவட்டம் ​ மாரனேரி, திருநெல்வேலி மாவட்டம் ​ பத்தமடை, ஈரோடு மாவட்டம் ​  தாளவாடி மற்றும் அம்மாபேட்டை, திருப்ர் மாவட்டம் ​ தளி, இராமநாதபுரம் மாவட்டம் ​ தொண்டி, தங்கச்சிமடம், பரமக்குடி ஆகிய இடங்களில் 6 கோடியே 59 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 காவல்நிலைய புதிய கட்டடங்களையும், காஞ்சிபுரம் மாவட்டம் ​ மேல்மருவத்தூர், கடலூர் மாவட்டம் ​ சேத்தியா தோப்பு, தஞ்சாவூர் மாவட்டம் ​ பாபநாசம், சிவகங்கை மாவட்டம் ​ திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை,  தேனி மாவட்டம் ​ உத்தமபாளையம், கோவை மாவட்டம் ​ ஆர்.எஸ். புரம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் ​ பரமக்குடி ஆகிய இடங்களில் ஒரு கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 மகளிர் காவல்நிலையங்களையும் தமிழக முதலமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக  திறந்து வைத்தார்.  

மேலும் திருவள்ளூர் மாவட்டம் ​ வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை குடியிருப்பு பகுதியில் 104 குடியிருப்புகள்,  சேலம் மாநகர் ​ சூரமங்கலத்தில் 16 குடியிருப்புகள், திருவண்ணாமலை மாவட்டம் பெரனமல்லூரில் 23    குடியிருப்புகள்,    பெரம்பலூர் மாவட்டத்தில் 11 குடியிருப்புகள், புதுக்கோட்டை மாவட்டம் ​ விராலிமலையில் 20 குடியிருப்புகள், திருவாரூர் மாவட்டம் ​ திருவாரூரில் 8 குடியிருப்புகள், நன்னிலத்தில் 26 குடியிருப்புகள் மற்றும் முத்துப்பேட்டையில் 3 குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் 1 குடியிருப்பு, கடையநல்லூரில் 3 குடியிருப்புகள், கன்னியாகுமரி மாவட்டம் ​ மணவாளக்குறிச்சியில் 6 குடியிருப்புகள், நாமக்கல் மாவட்டம் ​ வெண்ணாந்தூரில் 12 குடியிருப்புகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ​ ஆயுதப்படை குடியிருப்பில் 72 குடியிருப்புகள், ஓசூரில் 96 குடியிருப்புகள், திருப்ர் மாவட்டம் ​ குமாரலிங்கத்தில் 7 குடியிருப்புகள், மதுரை மாவட்டம் ​ கீழவளவில் 7 குடியிருப்புகள், கோட்டம்பட்டியில் 19 குடியிருப்புகள், காஞ்சிபுரம் மாவட்டம் ​ பாலூரில் 23 குடியிருப்புகள், அச்சரப்பாக்கத்தில் 23 குடியிருப்புகள் என 480 புதிய காவலர் குடியிருப்புகளும், கடலூர் மாவட்டம், கேப்பர்மலைப் பகுதியில் 67 சிறைக் காவலர் குடியிருப்புகளும் புதிதாக கட்டப்பட்டுள்ளன.தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தால் 31 கோடியே 85 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேற்கண்ட 547 புதிய குடியிருப்புகளை தமிழக முதலமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.  மதுரை மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலக புதிய கட்டடம், திருச்சி மாவட்டத்தில் தனிப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவுகளுக்கான புதிய அலுவலகக் கட்டடம், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலக புதிய கட்டடம், தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டின மருதூர் சோதனைச் சாவடிக்கான புதிய கட்டடம், ஈரோடு மாவட்டத்தில் ஆயுதப்படை அலுவலக புதிய கட்டடம், கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆர்.எஸ். புரம், துணை காவல் ஆணையர் அலுவலக கட்டடம் ஆகிய 6 கட்டடங்கள் 5 கோடியே 17 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதை தமிழக முதலமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக  திறந்து வைத்தார்கள்.  

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் 26 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகம் ஆகியவற்றிற்கான கட்டடங்களை திறந்து வைத்த நிகழ்ச்சியில், காவல்துறையினர் மற்றும் சிறைத்துறையினருக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் குடியேறவுள்ள குடும்பத்தினர் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகம், காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், காவல் துறையின் பிற பிரிவு அலுவலகங்கள் மற்றும் சிறைத்துறையினருக்கான குடியிருப்புக் கட்டடங்களை திறந்து வைத்து பேசியதாவது:-​ 

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட காவல் அலுவலகக் கட்டடம், 21 புதிய காவல் நிலையக் கட்டடங்கள்,  துறையின் பிற அலுவலகக் கட்டடங்கள், 8 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள், 480 காவலர் குடியிருப்புகள், சிறைத்துறையினருக்கான 67 குடியிருப்புகளை திறந்து வைத்ததில் உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.  தமிழகத்தில் சிறந்த சட்டம் ஒழுங்கு நிலைமையை பராமரிப்பது எனது தலைமையில் அமைந்துள்ள அரசின் தலையாய கடமையாகும்.  அதன் ஒரு அங்கமாக இன்று புதியதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்களும், பிற கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. காவல்துறையில் பணியாற்றுபவர்கள் மக்களுக்கு உற்ற நண்பராகவும், ஆலோசகராகவும் மற்றும் மனிதநேயம் மிக்கவராகவும் பணியாற்ற வேண்டும் என்று காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் பொதுவாக காவல்நிலையத்திற்கு செல்லவே அச்சப்படுவார்கள்.

தமிழகத்து மகளிர் எந்தவிதமான அச்ச உணர்வுமின்றி, தயக்கமுமின்றி, காவல்நிலையங்களுக்கு சென்று தங்களுக்குள்ள குறைகளை அங்கே எடுத்துக்கூறி அவற்றிற்கு நிவாரணம் தேடவேண்டும், பரிகாரம் தேடவேண்டும் என்பதற்காகவே முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை 1992 ஆம் ஆண்டு நான் தொடங்கிவைத்தேன்.  அதன் பின்னர் தமிழகமெங்கும் பல அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் துவக்கப்பட்டு நல்ல முறையில் செயலாற்றி வருகின்றன. இன்றைய தினம் 8 புதிய அனைத்து மகளிர் காவல்நிலையங்களின் கட்டடங்களை திறந்து வைத்ததில் நான் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.  காவலர்களுக்கான குடியிருப்புகள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டும், அப்போது தான் அவர்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட இயலும்.  இதனை கருத்தில் கொண்டு தற்பொழுது தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 480 புதிய காவலர் குடியிருப்புகளை இன்று திறந்து வைத்ததில் நான் உள்ளபடியே உவகை கொள்கிறேன். காவல்துறையினருக்கு எனது தலைமையிலான அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. காவல்துறையினர் பொதுமக்களுக்கு உற்ற நண்பாக இருந்து தங்கள் பணிகளை செவ்வனே ஆற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.  சிறைதுறையினரின் குடியிருப்புக்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் கைதிகளை பாதுகாக்கும் பணியில் தங்களை முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுத்திக் கொள்ள முடியும். இதனை கருத்தில் கொண்டு தற்பெழுது கட்டப்பட்டுள்ள சிறைத்துறையினருக்கான 67 புதிய குடியிருப்புகளை இன்று திறந்து வைத்ததில் நான் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் சிறைத்துறையினர் தங்கள் பணிகளை சிறந்த முறையில் ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்வின்போது,  செய்தி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், சிறைத் துறை தலைவர், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர்,   மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago