முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது டெஸ்ட்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஓவல், ஆக. 23 - இந்திய அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரை 4 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஸ்வான் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டைக் கைப்பற்றி இந்திய அணியின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அவருக்கு பக்கபலமாக பிராட், பிரஸ்னன் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் பந்து வீசினர். 

இந்திய அணியின் 2 -வது இன்னிங்சில் டெண்டுல்கர் மற்றும் மிஸ்ரா இருவரும் தோல்வியைத் தவிர்க்க போராடினர். ஆனால் மற்ற வீரர்க ள் எதிர்பார்த்த அளவிற்கு ஆடாததால் டிரா செய்யும் வாய்ப்பு பறி போனது. 

இங்கிலாந்து அணி வீரர்கள் 4 -வது டெஸ்டிலும் வெற்றி பெற்று சாத னை படைப்போம் என்று கூறியிருந்தனர். அது போலவே இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஷ் ஆக்கி விட்டனர். 

கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொ டரை இழந்தது கிடையாது. ஆனால் இங்கிலாந்திற்கு எதிரான இந்தத் தொடரில் தான் இந்திய அணி இவ்வளவு மோசமாக ஆடி வரலாறு காணாத அளவுக்கு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 4 -வது மற் றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் அருகே உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 18 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நன் கு பேட்டிங் செய்து பிரமாண்டமான ஸ்கோரை எட்டியது. அந்த அணி இறுதியில் 153 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 591 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. 

இயான் பெல் அதிகபட்சமாக 364 பந்தில் 235 ரன்னை எடுத்தார். இதில் 23 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இது டெஸ்டில் அவருக்கு முத லாவது இரட்டை சதமாகும். தவிர, பீட்டர்சன் 232 பந்தில் 175 ரன்னை எடுத்தார். 

இந்திய அணி சார்பில் ஸ்ரீசாந்த் 123 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ரெய்னா 58 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவி ர, இஷாந்த் சர்மா 1 விக்கெட் எடுத்தார். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 94 ஓவரில் அனைத்து விக்கெட்யுைம் இழந்து 300 ரன்னில் சுருண்டது. டிராவிட் மட்டும் தா க்குப் பிடித்து  ஆடி சதம் அடித்தார். மிஸ்ரா 43 ரன்னையும், ஆர். பி. சிங் 25 ரன்னையும், டெண்டுல்கர் 23 ரன்னையும் எடுத்தனர். 

இதனால் இந்திய அணி பாலோ ஆன் ஆனது. 2 -வது இன்னிங்சில் 91 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 283 ரன்னில் ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றது. 

இந்திய அணி தரப்பில் டெண்டுல்கர் 172 பந்தில் 91 ரன்னும், அமித் மிஸ்ரா 141 பந்தில் 84 ரன்னும் எடுத்தனர். இந்த ஜோடி ஆட்டம் இழந்த தும் மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பினர். இந்திய அணிக்கு டிரா செய்யும் வாய்ப்பு இருந்தது. ஆனால் பின்பு இறங்கிய வீரர்கள் தாக்குப் பிடித்து ஆடாததால் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து அணி தரப்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஸ்வான் 106 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட்டை சாய்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பிராட் , ஆண்டர்சன் மற்றும் பிரஸ்னன் ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இயான் பெல் தேர்வு செய்யப்பட்டார். 

இந்தத் தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்திய அணி ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. இங்கிலாந்து 3 -வது இட த்தில் இருந்தது. தொடர் வாஷ் அவுட்டானதைத் தொடர்ந்து இந்தியா 3 -வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து முதலிடத்தை பிடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்