முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராவிட் மன உறுதி - உசேன் வியப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன்,ஆக.24 - ராகுல் டிராவிட்டின் மன உறுதி குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசீர் ஹூசைன் வியப்பு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்களுக்கு டிராவிட் மிக சிறந்த முன் உதாரணம் என்றும் அவர் புகழ்ந்துள்ளார். இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களில் பெரும்பாலானோர் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ளவே தடுமாறுகின்றனர். ஆனால் ராகுல் டிராவிட் 4 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்களை எடுத்துள்ளார். அவர் ஒருவரது ஆட்டம் மட்டுமே இந்திய அணிக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. 

இது குறித்து டெல்லி மெயில் பத்திரிக்கையில் ஹூசைன் எழுதியிருப்பதாவது, ராகுல் டிராவிட்டின் மன உறுதி வியப்பை அளிக்கிறது. எந்த சூழ்நிலையில் களம் இறங்கினாலும் சிறப்பாக ஆடுகிறார். டெஸ்ட் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். இந்திய அணிக்காக தனி ஒருவராக போராடும் அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்