முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக முன்னாள் மந்திரியின் ஜாமீன் மனு தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர், ஆக. 24 - கர்நாடக முன்னாள் மந்திரி, அவரது மகன் ஆகியோரது ஜாமீன் மனுக்களை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. கர்நாடகத்தில் தொழில் அபிவிருத்தி வாரியத்தில் நிலம் மோசடி மற்றும் ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து முன்னாள் கர்நாடக அமைச்சர் கட்ட சுப்பிரமணிய நாயுடு அவரது மகன் ஜெகதீஸ், ஒரு சாப்ட் வேர் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசா ஆகியோர் கைது செய்யப்பட்டு கடந்த 8 ம் தேதி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். 

இவர்களுக்கு லோக் அயுக்தா கோர்ட்டில் ஜாமீன் வழங்காததை அடுத்து இவர்கள் 3 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு நீதிபதி ஜெகன்னாதன் இவர்கள் 3 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து விட்டார்.

இந்த 3 பேரில் நாயுடு மட்டும் உடல் நல பாதிப்பு காரணமாக பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்