முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசோதாவை 30-ம் தேதிக்குள் நிறைவேற்ற கெடு

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.24 - மக்கள் லோக்பால் மசோதாவை வருகின்ற 30-ம் தேதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று அன்னா ஹசாரே உறுதியாக கூறியுள்ளார். மக்கள் லோக்பால் மசோதாவை வரும் 30-ம் தேதிக்குள் பாராளுமன்ற இருசபைகளிலும் நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே கெடு விதித்துள்ளார். இது சிரமமான காரியமாகும். இது முக்கியமான மசோதாவாகும். இதை பாராளுமன்றத்தில் விரிவான முறையில் விவாதித்த பின்னர்தான் நிறைவேற்ற முடியும். அதனால் நடப்பு கூட்டத்தில் மசோதாவை நிறைவேற்ற முடியாது. இன்னும் 3 மாதங்கள் கழித்து கூடும் குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தில்தான் இது சாத்தியம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அன்னா ஹசாரே நேற்று 8-வது நாள் உண்ணாவிரதத்தின்போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் லோக்பால் மசோதாவை வரும் 30-ம் தேதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியாக ஆக வேண்டும். இந்த விஷயத்தில் நான் மிகவும் உறுதியாக இருப்பேன். மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தவறினால் எம்.பி.க்கள் வீடுகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு மசோதாவை நிறைவேற்றும்படி வலியுறுத்த வேண்டும் என்றார். லோக்பால் மசோதா விஷயத்தில் மக்களை மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. தற்போது எம்.பி.க்கள் வீடுகள் முன்பு தலா 25 முதல் 30 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மசோதாவை நிறைவேற்ற அரசு தவறினால் இந்த போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம். லோக்பால் மசோதா தொடர்பாக கூட்டு கமிட்டி கூட்டம் நடந்தது. அப்போது எங்களை அரசு தரப்பினர் ஏமாற்றிவிட்டனர். மத்திய அரசில் உள்ள 5 அல்லது 6 பேர் தான் நாட்டை ஆளுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை இல்லை என்று அன்னா ஹசாரே கூறினார். இப்படிப்பட்ட துரோகிகள் நாட்டை ஆளும்போது லோக்பால் மசோதா நிறைவேறினாலும் ஊழலை ஒழிக்கமாட்டார்கள் என்பதுதான் என் கவலையாகும். லோக்பால் கூட்டு கமிட்டி அமைத்த பிறகு கடந்த 4 மாதங்களாக நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அந்த நபர்கள் எங்களை ஏமாற்றி வருகிறார்கள் என்று ஹசாரே மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்