முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்வுக் குழு புதிய தலைவர் ஆகிறார் பின்னி?

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 25 - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்படலாம் என்று தெரிய வருகிறது. தற்போ தைய தலைவர் ஸ்ரீகாந்தின் பதவி நீட்டிக்கப்படவில்லை என்றும் கூற ப்படுகிறது.  இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்டில் மிகவும் மோச மான தோல்வியை சந்தித்து உள்ளது. இது பல்வேறு வகையில் நெருக் கடியை அளித்துள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்டிலும் இந்திய அணி மோசமாக தோற்றது. இந்த தோல்வியால் இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளனர். முன்னாள் வீரர்கள் பலர் தொடர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

4 டெஸ்டிலும் இந்திய அணி தோற்றதால் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான தோ ல்வி காரணமாக ஸ்ரீகாந்த்தை தேர்வுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்களில் சிலர் வலியுறுத்தி உள்ளனர். 

கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளில் சிலர் ஸ்ரீகாந்த்துக்கு ஆதரவாக உள்ளனர். உலகக் கோப்பையை இந்திய அணி பெற்றுக் கொடுத்ததற் கும், கடந்த 3 ஆண்டுகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடிதற்கு ம், தேர்வுக் குழுத் தலைவரான அவரது பொறுப்பு முக்கிய பங்காக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழு மும்பையி ல் அடுத்த மாதம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தேர்வுக் குழு குறித்து கடுமையாக விவாதிக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.

ஸ்ரீகாந்த் தேர்வுக் குழுத் தலைவராக நீடிப்பது பற்றி கிரிக்கெட் வாரிய த்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஸ்ரீகாந்த் இன்னும் ஒரு ஆண்டு தேர்வுக் குழுத் தலைவர் பதவியில் நீடிக்கலாம். 

இங்கிலாந்தில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக அவர் தனது பதவி நீட்டிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றும் கூறப்படுகிற து. ஸ்ரீகாந்த்துக்கு பதிலாக புதிய தேர்வுக் குழுத் தலைவராக ரோஜர் பின்னி தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்களில் சிலர் ரோஜர் பின்னி பெய ரை பரிந்துரை செய்துள்ளனர். இங்கிலாந்தில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு முதல் பலிக்கடாவாக ஸ்ரீகாந்த் தனது தேர்வுக் குழுத் தலைவர் பதவியை இழக்கிறார். 

ஸ்ரீகாந்த் 2008 -ம் ஆண்டு தேர்வுக் குழுத் தலைவராக பதவியேற்றார். திலிப் வெங்க்சர்க்காருக்குப் பதிலாக அவர் தேர்வுக் குழுத் தலைவர் பதவியை ஏற்றார். 

ஸ்ரீகாந்த் தேர்வுக் குழுத் தலைவராக பொறுப்பேற்கு முன்பு இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 5 -வது இடத்திலும், ஒரு நாள் போட்டிக் கான தரவரிசையில் 5 -வது இடத்திலும் இருந்தது. 

சிறந்த வீரர்களை தேர்வு செய்ததன் மூலம் இந்தியா டெஸ்டில் நம்பர் - 1 இடத்தையும், ஒரு நாள் போட்டியில் 2 -வது இடத்தையும் பிடித்து இருந்தது. தற்போது இங்கிலாந்தில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு வீரர்கள் தேர்வு சரியில்லை என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago