முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரேவின் மசோதாவை முழுமையாக ஆதரிக்க முடியாது

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.25 - ஊழலுக்கு எதிரான அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமாக உள்ளது. அதே சமயம் ஹசாரேவின் மசோதாவையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு விட முடியாது என்று பா.ஜ.க. கூறியுள்ளது. இது குறித்து பா.ஜ.க.வின் மேல்சபை துணைத் தலைவர் அலுவாலியா கூறியதாவது, ஊழலுக்கு எதிராக அரசுக்கு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது. இதை வைத்தே ஊழலை ஒழிக்க ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆர்வம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அதே போல ஹசாராவின் லோக்பால் மசோதாவையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த மசோதாவிலும் குறைபாடுகள் உள்ளன. வருகிற 30 ம் தேதிக்குள் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று ஹசாரே எச்சரிக்கை விடுத்திருப்பதும் ஏற்புடையது அல்ல. 

இந்த விஷயத்தில் அவருக்கு பாரதீய ஜனதாவின் ஆதரவு கிடைக்காது. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி எம்.பிக்கள் முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்று ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு கட்சியின் எம்.பிக்களும், அக்கட்சியின் கொறடாவின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே கொறடாவின் அனுமதி இல்லாமல் இதை அவர்களால் செய்ய முடியாது. அரசின் லோக்பால் மசோதா பலவீனமானது என்பதால் அதை திரும்ப பெற வேண்டும். அதற்கு பதிலாக புதிய மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். அதிகார வரம்பிற்குள் மசோதாவிற்குள் பிரதமரையும் கொண்டு வர வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் விருப்பம். ஆனால் அரசு கொண்டு வந்துள்ள மசோதாவில் இந்த அம்சம் இடம்பெறவில்லை. ஹசாரே கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவில் பல பிரிவுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆனால் அதே சமயத்தில் சில அம்சங்களில் குறைபாடுகள் தென்படுகின்றன. அந்த பிரிவுகளை திருத்தி மேம்படுத்த முடியும். இன்னும் சில அம்சங்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. எனவே இந்த மசோதாவும் முழுமை பெற்றது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்