முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஜீத்சிங்கின் மருமகன் அமெரிக்காவில் கைது

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மார்ச்.- 6 ​ஈரானுக்கு தகவல் தொடர்பு கருவி வழங்கிய வழக்கு தொடர்பாக ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜீத்சிங்கின் மருமகன் விக்ரம் ஆதித்ய சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 6 மாதம் வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை முடிந்து இவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் எனத் தெரிகிறது. ஈரானுக்கு ராணுவத்தில் பயன்படுத்தும் தகவல் தொடர்பு கருவிகளை அவர் விற்பனை செய்த போது அமெரிக்க பெடரல் போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். 

இவர் அரியானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மின்னணு கருவி நிறுவனத்தின் விற்பனை ஏஜண்டாக செயல்பட்டு வந்தார். பிலடெல்பியா மாகாண போலீசார் இவரை கண்காணித்து வந்தனர். ஈரானை சேர்ந்த ஆயுத வியாபாரி அமீர் ஆர்டோபிலிக்கு தகவல் தொடர்பு கருவிகளை விற்பனை செய்த போது போலீசார் அவரை கைது செய்தனர். 

இது குறித்து அஜீத்சிங் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறும் போது, தான் விற்பனை செய்த தகவல் தொடர்பு சாதனத்தை யார் உபயோகிக்க போகிறார் என்பது விக்ரம் ஆதித்ய சிங்குக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட விக்ரம் ஆதித்யசிங் அரிஸோனா மாகாணம் பவுண்டன் ஹில் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிஅவரை 6 மாதம் வீட்டுக் காவலில் வைக்கும் படியும், 3 ஆண்டுகள் வரை அவரை தீவிரமாக கண்காணிக்கும் படியும் உத்தரவிட்டார். அத்துடன் ஒரு லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் வீட்டுக் காவல் முடிந்த பிறகு அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று தோன்றுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்