முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே உண்ணா விரதத்தில் விஜய் பங்கேற்ப்பு

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.26 - காந்தியவாதி அன்னா ஹசாரே ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று 10 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். தமிழ்த் திரையுலகினர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்து ஆதரவு தெரிவித்தனர். இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் நடிகர் விஜயும் ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று அவருடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் டெல்லி தமிழ் சங்கத்தினர், ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு விஜய்யை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து நேராக ராம்லீலா மைதானத்துக்கு சென்ற விஜய், அன்னாஹசாரேவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ரசிகர்களுடன் அவர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.  

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டது குறித்து நடிகர் விஜய் கூறியதாவது, ஹசாரே காந்திய வழியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உலக நாடுகளே இந்த அறவழியைத்தான் பின்பற்றுகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா காந்திய வழியை பாராட்டி உள்ளார். ஊழல் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. லஞ்சம், ஊழல் ஒழிந்தால்தான் இந்தியா வல்லரசாக உயரும். இதற்காகத்தான் அன்னாஹசாரே போராடுகிறார். மக்கள் பிரச்சினைக்காக சுயநலம் இல்லாமல் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார். இது ஒரு நல்ல போராட்டம். அரசியல் சாயம் இல்லாதது. மக்கள் நலனுக்காக நடத்தப்படுகிறது. எனவே இதில் நான் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஊழல் இல்லாத நாடாக இந்தியா உருவாக வேண்டும். அது விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு விஜய் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago