முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஸ்செக்ஸ் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. 27 -  இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி சஸ்செக்ஸ் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இது இந்திய வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற் றுப் பயணம் செய்து கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 4 - 0 என்ற கணக்கில் இந்திய அணியை ஒயிட் வாஷ் ஆக்கியது. 

அடுத்ததாக ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. முன்னதாக 3 பயிற்சி ஆட்ட ங்களில் பங்கேற்க இந்திய அணி முடிவு செய்திருந்தது. 

அதன்படி முதல் பயிற்சி ஆட்டம் ஹோவ் நகரில் நடந்தது. இதில் இந் திய அணி சஸ்செக்ஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய சஸ்செக் ஸ் அணி 236 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக ஆடி 4 விக்கெட் வித்தியாசத்தில் சஸ்செக்ஸ் அணியை தோற்க டித்தனர். 

டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து மோசமாக தோல்வியைத் சந்தித்து வந்த இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் உற்சாகம் அடைந்துள்ள து. இதில் அனைத்து வீரர்களுமே சிறப்பாக ஆடினார்கள். 

முன்னணி வேகப் பந்து வீச்சாளரான,  ஆர்.பி.சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி, இந்தியாவின் வெற்றிக்கு முக்கி ய காரணமாக இருந்தார். இந்திய வீரர்கள் பார்திவ் படேல் 55 ரன்களு ம், விராட் கோக்லி 71 ரன்களும், ரோகித் சர்மா 61 ரன்களும் குவித்தனர். 

இதே ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினால் இந்திய அணி இனி வரும் ஆட்டங்களில் வெற்றியை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

ஒரு நாள் தொடரை, எப்படியாவது கைப்பற்றி தங்கள் பலத்தை நிரூ பிக்க வேண்டும் என்று அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், 2 -வது பயிற்சி ஆட்டம் நடக்க இருக்கிறது. 

2 -வது பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி கென்ட் அணியுடன் மோத இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி துவங் க இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர வளைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago