முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியாருக்கு தாரை வார்த்ததால் தான் சுங்கவரி கொள்ளை

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.27 - டி.ஆர்.பாலு கடந்த காலத்தில் 4500 கி.மீ சாலைகளை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்ததால் தான் சுங்கசாவடி கட்டண க்கொள்ளை நடைபெறுகிறது என்று போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். நெடுஞ்சாலைகள் துறை பொதுப்பணித்துறை மானிய கோரிக்கைகளின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் டோல்கேட் வசூல் கொள்ளை நடைபெறுகிறது.

1 பஸ்ஸுக்கு ரூ.30 ஆயிரம் 40 ஆயிரம் கொள்ளை நடைபெறுகிறது. அதை மத்திய அரசிடம் பேசி குறைத்திட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு முறையும் பேகும்போதும் , டோல்கேட் வரி செலுத்தப்பட வேண்டிய நிலையுள்ளது. அதை மாநில அரசு தலையிட்டு மாற்றிட முயற்சி எடுக்க வேண்டும் என்று பேசியபோது, குறுக்கிட்டு பேசிய போக்குவரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தேசிய நெடுஞ்சாலை  அனைத்து மத்திய அரசின் கீழ் வருகிறது. கடந்த மைனாரிட்டி தி.மு.க. கருணாநிதி ஆட்சியில் அந்த கட்சியின் சார்பில் மத்திய  மந்திரியாக இருந்த டி.ஆர்.பாலு 4500 கி.மீ தேசிய நெடுஞ்சாலையை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டார். அதன் மூலம் சுங்கவரி கொள்ளைக்கு வழிவகுத்தார். அதை மாற்ற உறுப்பினர் ஞகோரிக்கை வைத்துள்ளார். கூடிய விரைவில் அதற்கு தீர்வு காணப்படும். 

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்