முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கம்யூனிஸ்ட்க்கு முதல்வர் பதிலடி

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.27 - தமிழகத்தில் சாலைகள் சம்பந்தமாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருக்கு பதிலளித்த முதல்வர், நீங்கள் இன்று பேசுகிறீர்கள் நாங்கள் அன்றே யோசித்து பட்ஜெட்டில் அறிவித்துவிட்டோம் என்று பதிலளித்தார். நேற்று சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற தலைவர் குணசேகரன் பேசியபோது தமிழகத்தில் வாகன பெருக்கம் 1951-லிருந்து இன்றுவரை 500 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் அதற்கு ஏற்றார்போல் சாலை வசதிகள்  50 மடங்கு மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. வாகன பெருக்கத்திற்கு ஏற்றார்போல் சாலை வசதிகள் பெருகவில்லை. இதில் முதல்வர் தனிகவனம் செலுத்த வேண்டும் என்று பேசியபோது, குறுக்கிட்டு முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது, 

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த சாலைகளை சீரமைக்க முதல்வர் தனிகவனம் செலுத்த வேண்டும் என்று உறுப்பினர் பேசினார். ஏற்கனவே இதற்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி பட்ஜெட்டில் 44-வது பக்கத்தில் 72-வது பத்தியில் விரிவாக கூறியுள்ளோம். (முழுவதையும் படித்தார்) மாநிலத்தின் சீரான பொருளாதார வளர்ச்சியை  3 ஆண்டுகளில் ரூ.24000 கோடி செலவில் 963 கி.மீ மாநில நெடுஞ்சாலை இருவழி சாலைகளாக்கவும் 3070 கி.மீ மாவட்ட சாலைகளை இருவழி சாலைகளாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான நிதிதேவைப்படுகிறது. அரசுக்கு மாற்றாக தனியார் உதவியுடன் அமைக்க முயற்சி எடுக்கப்படுகிறது.

உலக வங்கி நிதியுதவியுடன் 2500 கி.மீ சாலைகளை ரூ.5 ஆயிரம் கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. அரசும் முதல்வரும் தனிகவனம் செலுத்தி வருகிறார்கள். நாங்கள் பதவி ஏற்று நூறு நாட்கள்தான் ஆகிறது. 3 ஆண்டுகள் கழித்து பாருங்கள் சாலைகளை, பிறகு எங்களை கேளுங்கள், நீங்கள் சொல்வதற்கு முன்பே ஆலோசித்து என்னென்ன திட்டங்கள் எவ்வளவு செலவு என்பதை யோசித்து நிதிநிலை அறிக்கையாக அளித்துள்ளோம்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்