முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலப்பறிப்பு - தி.மு.க.வினரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, ஆக.28 - நிலப்பறிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் 2 பேரின் ஜாமீன் மநுக்கள் நேற்று முன்தினம் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டன. மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் காந்தி எனபவரது புகாரின் பேரில் அப்பகுதி தி.மு.க. நிர்வாகி ஒச்சுபாலு, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோன்று மேலமாசி வீதி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது புகாரின் பேரிலும் ஒச்சுபாலு மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கிலும் அவர் கைதானார். இந்த இரு வழக்குகளிலும் தனக்கு ஜாமீன் வழங்கும் படி ஒச்சுபாலு தரப்பில் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இவற்றை விசாரித்த நீதிபதி அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி இவர் நிலப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் தன்னை விடுவிக்கும்படி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி(பொறுப்பு) உமாமகேஸ்வரி அதை தள்ளுபடி செய்தார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டுசுரேஷ் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கியதாக கணேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் டாக்டர்கள் சரவணமுத்து, நவநீத கிருஷ்ணன் மற்றும் திருச்சி பத்திரபதிவு டி.ஐ.ஜி அண்ணாமலை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் பொட்டு சுரேசும் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பொட்டு சுரேசை 6.9.2011 வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்குமாறு நீதிபதி (பொறுப்பு )உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்