முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து எதிரான ஒரு நாள் தொடரையாவது கைப்பற்றுமா?

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. 28 - இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையாவது இந்திய அணி கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து ள்ளது. செப்டம்பர் 3 -ம் தேதி இந்தத் தொடர் துவங்குகின்றது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி அபாரமாக ஆடி, 4 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணியை வாஷ் அவுட்டாக்கியது. 

இந்த நான்கு டெஸ்டிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் டெ ஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணியின் தகுதி இறங்கிய து. முதலிடத்தில் இருந்து 3 -வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 15 வருடங்களாக ஏற்றத்தை சந்தித்து வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை அடைந்தது. இதனா ல் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்தது. 

அதன் விளைவாக உலகக் கோப்பையையும், வெல்ல முடிந்தது. அத ன் பிறகு, இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படத் தொடங்கியது. 4 போட்டிகளில் தோற்றதன் மூலம் முதலிடத்தில் இருந்து 3 -வது இடத் திற்கு இறங்கியது. 

அடுத்து இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே ஒரே ஒரு 20 ஓவர் போட்டியும், 4 ஒரு நாள் போட்டிகளும் நடக்க இருக்கின்றன. அதன் விவரம் வருமாறு -  20 ஓவர் போட்டி - ஆகஸ்டு 31 - மான்செ ஸ்டர். 

முதல் ஒரு நாள் போட்டி - செப்டம்பர் 3 - செஸ்டர்லீ. 

2 - வது போட்டி - செப்டம்பர் 6 - செளத்டாம்டன். 

3 -வது போட்டி - செப்டம்பர் 9 - லண்டன், ஓவல். 

4 -வது போட்டி - செப்டம்பர் 11 - லார்ட்ஸ். 

5 -வது போட்டி - செப்டம்பர் 16 கார்டிப். 

இந்தத் தொடரையாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற் பட்டுள்ளது. ஏற்கனவே, இப்போட்டிகளுக்கான இந்திய வீரர்கள் அறி விக்கப்பட்டு உள்ளனர். இதிலும் ஜாஹிர்கான், சேவாக், காம்பீர், ஆகியோர் இடம் பெறுவது சந்தேகமே. 

இந்திய அணிக்கு  தற்போது உத்வேகம் தான் தேவை. களத்தில் நீடித் து நிற்க வேண்டும். அப்போது தான் ரன்கள் உயரும். அதே போல எதிரணியை மிரட்டும் வகையில் பந்து வீச்சும் அமைய வேண்டும். 

ஜாஹிர்கான், இஷாந்த் சர்மா ஆகியோரை மட்டும் நம்பியிராமல் புதி ய இளம் பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தரவரி சையி ல், முதல் 4 இடங்களுக்குள் இருந்தால் தான், 2013 -ம் ஆண்டு தொட ங்க உள்ள டெஸ்ட் சாம்பியன் போட்டிகளில் பங்கேற்பதற்கு தகுதி பெற முடியும். 

ஆனால், இப்போதைய நிலை நீடித்தால், அடுத்து ஆஸ்திரேலியாவுக் கு எதிரான தொடரையும், இந்தியா இழப்பதற்கு தான் அதிகம் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்