முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூக்கு - வேலூர் சிறையில் கமாண்டோ குவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

வேலூர், ஆக. 28 - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 3 பேருக்கு வரு கிற 9 -ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து வேலூர் மாவட் ட அகதிகள் முகாம்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 -ம் ஆண்டு மே மாதம் 21 -ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த போது, மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானார். இந்த வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ததில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முருகன், அவரது மனைவி நளினி, சாந்த ன் ,பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப் பட்டது. 

தவிர, ராபர்ட் பயாஸ், ஜெயக் குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்தும் 1999 -ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது நினைவு கூறத்தக்கது. 

வரும் 9 -ம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக மூன்று பேரிடமும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

சிறை வாசலில் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் 20 போலீசார் பாதுகாப் பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கமாண்டோ படை யும், குவிக்கப்பட்டு உள்ளது. சிறை வளாகத்தில் ரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

தூக்கு தண்டனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப் புகள், கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால் வேலூர் மாவட்டம் முழுவதும் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போ டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்