முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாடுகள் வாங்க கடனுதவி அளிக்க உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக.28 - மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்க ஒரு மாதத்திற்குள் 1000 கறவை மாடுகள் வாங்குதற்கான கடனுதவியை அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார். மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆவின் கொள்முதல் அலுவலர்கள், துணைப்பதிவாளர்கள் மற்றும் சார்பு நிலை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கி பேசிய கலெக்டர் சகாயம் மதுரை மாவட்டத்தில் பால் கொள்முதல் இலக்கை விட 14,194 லிட்டரும், தேனி மாவட்டத்தில் 17, 846 லிட்டரும் என மொத்தம் 32,040 லிட்டர் குறைவாக உள்ளது. இந்த குறைபாட்டை அடுத்த 4 நாட்களில் நிவர்த்தி செய்யவேண்டும். இலக்கை எட்டாத அதிகாரிகளுக்கு மெமோ கொடுக்கப்படும். நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் குறைவான எண்ணிக்கையில் கறவை மாடுகளுக்கான கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஒரு மாதத்தில் 1000 பசுக்களை வாங்க கடனுதவி வழங்கப்படவேண்டும். பால் உற்பத்தியை பெருக்க அதிகாரிகள் சரியான வழியில் செயல்படவேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இக்கூட்டத்தில் ஆவின் பொது மேலாளர் முத்தையா, மாவட்ட பொது மேலாளர் மாரிமுத்து, துணைப்பதிவாளர்கள்(பால்வளம்) பொன்னுச்சாமி(மதுரை), சண்முகராஜ்குமார்(தேனி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெய்சிங் ஞானதுரை, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்