முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வள்ளியூர் பேரூராட்சியில் தி.மு.க.வினர் ஊழல்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

நெல்லை ஆக-28 - பல்வேறு முறைகேடுகள் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் செய்த வடக்கு வள்ளியூர் பேரூராட்சி தி.மு.க. தலைவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பேரூராட்சி கவுன்சிலர்கள் 12 பேர் நெல்லை வந்த தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமியை சந்தித்து மனுக்கொடுத்தனர். நெல்லை மாவட்டம் வடக்கு வள்ளியூர் பேரூராட்சித்தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் ஆர்.சங்கரபாண்டியன். தி.மு.க. வை சேர்ந்த இவர் பொறுப்பேற்ற காலத்திலிருந்து பல்வேறு முறைகேடுகள் மூலம் பல கோடி ரூபாய் பேரூராட்சி நிதியை மோசடி செய்துள்ளார். குறிப்பாக வள்ளியூர் பேரூராட்சியில் குடிநீர் சப்ளை செய்வதற்காக பைப்லைன் பதிக்கவேண்டும் என்று 

தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணிக்கான டெண்டர்கள் அவருடைய சகோதரர் மற்றும் உறவினர்கள் பெயர்களிலே எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகள் நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் பைப்லைன் பதிக்காமலே, பதிக்கப்பட்டதாக கணக்கெழுதி பலகோடி ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தை அவரது உறவினர்கள் அபகரிக்க உறுதுணையாக இருந்துள்ளார். வடக்கு வள்ளியூரில் இயங்கிவரும் வாரச்சந்தையை குத்தகைக்கு எடுத்து நடத்த 3ஆண்டுகால நீட்டிப்புக்கு அனைத்து கவுன்சிலர்கள் முன்னிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பேரூராட்சி தலைவர் மினிட் புத்தகத்தில் தீர்மானத்தை மாற்றி எழுதி ஏல தேதியையும் மாற்றியுள்ளார். மேலும் வள்ளியூர் புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள 17 கடைகளை சட்டத்திற்கு புறம்பாக பணம் பெற்றுக்கொண்டு 9ஆண்டு கால நீட்டிப்பு செய்துள்ளார். மினிட்புத்தகத்தில் சட்டவிரோதமாக தீர்மானத்தை மாற்றியுள்ளார். அதில் 5கடைகள் அவரது சகோதரர் பெயரில் உள்ளது. இவ்வாறு கடந்த காலங்களில் இது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் மூலம் பேரூராட்சி நிதி பல கோடியை மோசடியாக எடுத்துள்ளார். எனவே இது தொடர்பாக தகுந்த விசாரணை நடத்தி பேரூராட்சி தலைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 18 கவுன்சிலர்களை கொண்ட வடக்கு வள்ளியூர் பேரூராட்சியில் தலைவருக்கெதிராக 12 கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து புகார் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago