முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி வரலாற்றில் முன்னோடி திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.28 - கல்வியின் தரம் உயர்வதற்காக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்கள் கல்வி வரலாற்றில் முன்னோடியான திட்டம் என்று பேரவை முன்னவரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். பள்ளிக்கல்வி மேம்பாட்டுத்திட்டங்களை முதல்வர் அறிவித்து முடித்தவுடன் உறுப்பினர்கள் ஆரவாரத்துடன் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர். அதன்பிறகு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது, இந்தியாவிற்கே முன்னோடியான திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக கல்வியாளர்கள் மனதில் இருந்த சஞ்சலங்களை போக்கும் வகையில் உண்மையான சமச்சீர் கல்வி எது என்பதை காட்டும் வகையில் இந்த திட்டங்கள் உள்ளன. கல்வி துறையில் புதிய வரலாற்றை முதல்வர் துவக்கியுள்ளார். இந்தியாவிற்கே இது முன்னோடி திட்டமாக இது திகழ்கிறது. மாணவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு பேரவை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையடுத்து பேரவைத்தலைவர் ஜெயக்குமார் கூறுகையில், எதிர்கால சமுதாயம் ஒளிபெருவதற்கான திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். மார்க்சிஸ்ட உறுப்பினர் ஆ. சவுந்திரராஜன், இந்திய கம்யூனிஸ்ட கட்சி உறுப்பினர் ஆறுமுகம், எதிர்கட்சி துணைத்தலைவர் பண்ருட்டி ராமசந்திரன்,காங்கிரஸ் உறுப்பினர் ஜான்ஜேக்கப், பா.ம.க உறுப்பினர் கணேஷ்குமார், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர் முதல்வரின் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்