முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று துவக்கம்

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க், ஆக. - 29  - இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று துவங்க இருக்கிற து. இதில் பங்கேற்க முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆய த்த நிலையில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள் டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிக் சாம்பியன் பட்டம் பெற்றார். பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ரபேல் நடால் கைப்பற்றியது நினைவு கூறத்தக்கது. இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று துவங்குகிறது. இந்தப் போட்டி அடுத்த மாதம் 11 -ம் தேதி வரை நடக்கிறது. இதில் உலகின் நம்பர் - 1 வீரரான நோவக் ஜோகோவிக் (செர்பியா) இரண்டாம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), 3 -ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 4 -ம் நிலை வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), போன்ற முன்னணி வீரர்கள் உள்பட 128 வீரர் கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டின் 3 - வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற ஜோகோ விக் ஆர்வமாக உள்ளார். அவருக்கு நடால், ரோஜர் பெடரர் இருவரு ம் கடும் சவாலாக இருப்பார்கள். ஜோகோவிக் இதுவரை 3 கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். நடால் இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதியில், தோற் றார். விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஜோகோவிக்கிடம் தோற்று இருந்தார். அதற்கு நடால் பதிலடி கொடுப்பாரா? என்று எதிர்பார்க்க ப்படுகிறது.
நடப்பு சாம்பியனான நடால் இதுவரை 10 கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். ரோஜர் பெடரர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்துக்கு பிறகு எந்த கிராண்ட் ஸ்லாம் பட்டமும் பெறவில்லை.
இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டியில் நடாலிடம் தோற் று இருந்தார். அமெரிக்க ஓபன் பட்டத்தை அவர் 5 முறை வென்று உள்ளார். பெடரர் மொத்தம் 16 கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவிலும், சாம்பியன் பட்டம் பெற கடும் போட்டி நிலவும் என்று தெரிய வருகிறது. குறிப்பாக, டென்மார்க் வீராங்க னை வோஸ்னியாக்கி, ரஷ்ய வீராங்கனை ஜூவானரேவா, மரியா ஷரபோவா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா ஆகியோர் இடை யே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய வீரர் சோம்தேவிற்கு முதல் சுற்றே மிகவும் கடுமையானதாகு ம். அவர் முதல் சுற்றில் 4 -ம் நிலை வீரர் ஆன்டி முர்ரேயை (இங்கிலா ந்து) சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்