முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி.க்கு எதிரான ஒரு நாள் தொடர் இந்திய வீரர் காம்பீர் பங்கேற்பாரா?

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

லீசெஸ்டர், ஆக. - 30  - இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் துவ க்க வீரரான கெளதம் காம்பீர் பங்கேற்பது கேள்விக் குறியாகியுள்ளது. அவர் உடல் தகுதி பெறுவது சந்தேகமாக உள்ளது. இது பற்றிய விபர ம் வருமாறு -  இந்திய கிரிக்கெட் அணி தோனி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான அணிக் கு எதிராக விளையாடி வருகிறது. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடந்தது. இதில் இந்திய அணி மோ சமாக ஆடி, 0 - 4 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனால் தரவ ரிசையில் நம்பர் - 1 இடத்தையும் இழந்தது.  இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது காம் பீர் காயம் அடைந்தார். பீட்டர்சன் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முய ன்ற போது அவர் பின்புறமாக தலைக் குப்புற கீழே விழுந்தார்.  இதனால் அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. கடைசி டெ ஸ்டில் அவரால் சரியாக விளையாட முடியவில்லை. காம்பீருக்கு எம். ஆர். ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அனைத்து முடிவுகளும் நல்ல படியாகவே இருந்தது. இதற்கி டையே அவருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. பார்வை மங்கலாக இருப்பதாக தெரிவிக்கப்ப ட்டது.
இதற்கிடையே காம்பீர் நிலையில், எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இதனால் அவர் ஒரு நாள் தொடரில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. காம்பீர் உடனடியாக நாடு திரும்புவார் என்று கூற ப்படுகிறது.
ஏற்கனவே வீரர்களின் காயத்தால் இந்திய அணி சிக்கி சின்னா பின்னமாகி உள்ளது. ஜாஹிர்கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சேவாக் ஆகியோர் ஏற்கனவே காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் விளை யாடவில்லை. அந்த பட்டியலில் காம்பீரும் தற்போது இணைந்து விட்டார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டி 31 -ம் தேதி நடக்கிறது. இதனைத் தொடர்ந்து 5 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெறும். செப்டம்பர் 3,6, 9, 11 மற்று ம் 16 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இந்திய அணி மோதும் 3 - வது பயிற்சி ஆட்டம் நேற்று நடந்தது. இந்தி ய அணி இதில் லீசெஸ்டர் அணியுடன் மோதியது. முன்னதாக நடந்த 2 பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago