முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாஹிர்கான் - 18 பேருக்கு அர்ஜூனா விருது ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஆக. - 30  - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜாஹிர்கான் மற்றும் 18 பேருக்கு அர்ஜூனா விருதை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கி னார். துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங்கிற்கு கேல்ரத்னா விருது அளிக் கப்பட்டது. இதன் விபரம் வருமாறு -  சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருதுகளை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தியும், கெளரவப்படுத்தியும் வருகிறது.  இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா, அர்ஜூனா விருதுக்கான விவரம் ஏற் கனவே அறிவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகை யில் நேற்று நடந்தது.  இந்திய விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விரு தான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது துப்பாக்கி சுடும் வீரர் ககன் நர ங்கிற்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இதை வழங்கி னார்.  அவருக்கு பதக்கத்துடன் ரூ. 7.50 லட்சம் வழங்கப்பட்டது. 28 வயதான ககன் நரங் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த்தில் 4 தங்கம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் பெற்று இருந்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் ககன் நரங் ஆவார். கடந்த ஆண்டு அவருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படாததால் அதிருப்தி தெரிவித்து இருந்தார்.
இந்திய அணியின் வேகப் பந்து வீரர் ஜாஹிர்கான் உள்பட 19 பேர் அர் ஜூனா விருதுக்கு அறிவிக்கப்பட்டனர். அர்ஜூனா விருதுக்கான 19 வீரர்களின் பெயர் மற்றும் அவர்களது துறை ஆகியவற்றின் விவரம் வருமாறு -
ஜாஹிர்கான் (கிரிக்கெட்), ராகுல் பானர்ஜி (வில்வித்தை), பிரீஜா ஸ்ரீ தரன், விகாஸ் கவுடா (தடகளம்), ஜூவாலா கட்டா(பேட்மிண்டன்), கரன் ஜாய்சிங் (குத்துச் சண்டை), சுனில் செட்ரி (கால்பந்து), ராஜ் பா ல்  சிங் (ஹாக்கி), விர்த்வால் காடே , கரம்கர் (நீச்சல்), தேஜேஸ்வின் சவாந்த் (துப்பாக்கி சுடுதல்), ஆசிஷ் குமார் (ஜிம்னாஸ்டிக்), சோம் தேவ் தேவ் வர்மன் (டென்னிஸ்), ரவீந்தர் சிங் (மல்யுத்தம்), ரவிக் குமார் (பளுதூக்குதல்), சந்தியா ராணி (ஊசூ), சஞ்சய் குமார் (கைப்பந்து), ராஜேஷ் குமார், தேஜஸ்வினிபாய்(கபடி).
இதில் ஜாஹிர்கான், சோம்தேவ், ஆசிஷ்குமார், விகாஸ் கவுடா ஆகி யோர் பல்வேறு காரணங்களுக்காக விருது வழங்கும் விழாவில் பங் கேற்கவில்லை. மற்றவர்கள் பங்கேற்று ஜனாதிபதியிடம் இருந்து அர் ஜூனா விருது பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்